வீரவசந்தராயர் மண்டபம், மதுரை மீனாட்சி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வீரவசந்தராயர் மண்டபம், மதுரை மீனாட்சி கோயிலின் கிழக்கு வாசல் வழியாக சுவாமி சந்நதிக்கு செல்லும் வழியில், ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இம்மண்டபம் 7,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இம்மண்டபம் பூஜைப் பொருட்கள், மரம், உலோகம் மற்றும் பிளாஸ்டிக்கிலான பொம்மைகள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் அறுபதுக்கும் மேற்பட்ட கடைகள் கொண்டது. இம்மண்டபத்தின் நடுவில், சுவாமியை நோக்கியவாறு நந்தி சிலை உள்ளது.

தீ விபத்து

2 பிப்ரவரி 2018 (வெள்ளிக்கிழமை) அன்று இரவில் கோயில் கதவுகள் பூட்டியப் பின்னர், மண்டபத்தில் இருந்த ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பெருந் தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் 40 கடைகள் முற்றிலும் தீயில் அழிந்ததுடன், தீயின் கடும் வெப்பத்தின் காரணமாக, வீரவசந்தராய மண்டபத்தின் மேற்கூரையும், கருங்கல் தூண்களும், பக்கவாட்டுச் சுவர்களும் பலத்த சேதமுற்று இடிந்து விழுந்தது. மண்டபத்தின் மூன்றில் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது[1][2] ஆனால் அருகில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சேதமின்றி தப்பியது. தற்போது இம்மண்டபத்தில் இருந்த மீதமுள்ள கடைகள் வெளியேற்றப்பட்டது. மண்டபத்தின் சீரமைப்பு பணிக்காக வீரவசந்தராயர் மண்டபம் மற்றும் ஆயிரங்கால் மண்டத்தின் பகுதிகள் பக்தர்கள் செல்லாதவாறு மூடப்பட்டுள்ளது.[3]

மறுசீரமைப்பு

2021-ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சி கோயிலில் குடமுழுக்கு]] நடைபெற உள்ளதால், வீரவசந்தராயர் மண்டபத்தின் மறுசீரமைப்புப் பணிகளை 3 பகுதிகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. புனரமைப்புப் பணியில் நாமக்கல் பகுதியில் உள்ள கருங்கற்களை சில குவாரிகளில் தேர்வு செய்து வெட்டி எடுப்பது முதல் பகுதியாகவும், அதை அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதை மற்றொரு பகுதியாகவும், கட்டுமானப் பணியை மூன்றாவது பகுதியாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சீரமைப்பு பணிகள் முதல் கட்டப் பணி முடிந்து, இரண்டாம் பணியில் துவக்க நிலையில் உள்ளது. [4][5]<ref>வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு<ref>

மேற்கோள்கள்

  1. Fire in Madurai’s Meenakshi temple sparks demand for shops to be evicted from complex
  2. Meenakshi temple mandapam worst hit by fire
  3. "தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் பழமை மாறாமல் புதுப்பிக்க முடியுமா?". Archived from the original on 2021-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.
  4. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டபம் புதுப்பிப்பு எப்போது? - கும்பாபிஷேகம் தள்ளிப்போக வாய்ப்பு
  5. எப்போது? மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் ... பக்தர்கள் எதிர்பார்ப்பு