வி. மோகன்
மருத்துவர். வி. மோகன் | |
---|---|
பிறப்பு | கேரளம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை |
பணி | நீரிழிவு நோய் மருத்துவர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நீரிழிவு நோய் (இரண்டாவது வகை) |
விருதுகள் | பத்மசிறீ மரு. பி. சி. ராய் விருது |
வி. மோகன் (V. Mohan) என்பவர் இந்திய மருத்துவர்/அறிவியலாளர், நீரிழிவு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். இவர் மருத்துவர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவராக உள்ளார். இது நீரிழிவு சிகிச்சைக்கான பன்னாட்டு கூட்டமைப்பின் மையம் ஆகும்.[1] இவர் சென்னையிலுள்ள சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.[2] இது நீரிழிவு தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சிக்கான இந்திய மருத்துவ ஆய்வு குழும மையமாகும்.
கல்வி
மருத்துவர் மோகன் தனது இளநிலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்வியை (பொது மருத்துவம்) மதராசு மருத்துவக் கல்லூரியில் முடித்தார். 1984-85-ல், இலண்டன், அரச் முதுநிலை மருத்துவப் பள்ளி மற்றும் ஹேமர்ஸ்மித் மருத்துவமனையில் வெல்கம் அறக்கட்டளை ஆராய்ச்சி உறுப்பினராகவும், 1985-86-ல் செருமனியின் உல்ம் பல்கலைக்கழகத்தில் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் சகாவாகவும் ஒரு வருடம் பணியாற்றினார். இவர் 1987-ல் முனைவர் மற்றும் பின்னர் 1997-ல் ஆய்வறிக்கை மூலம் அறிவியல் முனைவர் பைப்ரோகால்குலசு கணைய நீரிழிவு துறையில் ஆராய்ச்சிக்காக பெற்றார்.
விருது
மோகன், நீரிழிவு மருத்துவத் துறையில் செய்த சாதனைகளுக்காக இந்திய அரசின் பத்மசிறீ விருது உட்பட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.[3] 2018ஆம் ஆண்டில், இவர் அமெரிக்க நீரிழிவு சங்கத்திடமிருந்து நீரிழிவு நோய் குறித்த சேவைக்காகப் பன்னாட்டு விருதான மருத்துவர் கரோல்ட் ரிப்கின் விருதினையும் பெற்றார்.[4][5] மேலும் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவர் ஆவார்.[6] இந்திய மருத்துவ குழுவின் மருத்துவர் பி. சி. ராய் விருதையும் இவர் பெற்றவர்.[7] இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த அறிவியலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[8][9]
மேற்கோள்கள்
- ↑ "Dr. Mohan's Diabetes Specialities Centre".
- ↑ "::Madras Diabetes Research Foundation::". www.mdrf.in.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "2018 Harold Rifkin Award for Distinguished International Service in the Cause of Diabetes - Viswanathan Mohan, MD, PhD | American Diabetes Association".
- ↑ Piemonte, Lorenzo (23 July 2018). "Distinguished International Service awarded to advocate and doctor from India". பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
- ↑ "ADA awards Indian Doctor, Dr V Mohan for distinguished service in Diabetes". Medical Dialogues. 6 March 2018. https://medicaldialogues.in/ada-awards-indian-doctor-dr-v-mohan-for-distinguished-service-in-diabetes/.
- ↑ "B.C. Roy awards for 55 doctors". தி இந்து (Chennai, India). 2 July 2008 இம் மூலத்தில் இருந்து 5 July 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080705124202/http://www.hindu.com/2008/07/02/stories/2008070260651700.htm.
- ↑ "Dr V Mohan bags recognition as Tamil Nadu's topmost scientist". www.biospectrumindia.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
- ↑ "Dr.V. MOHAN RECOGNISED AS TAMIL NAdu's TOPMOST SCIENTIST – Medgate Today".
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- "Profile of Top 25 scientists in India". India Today (in English). 2011-09-11. பார்க்கப்பட்ட நாள் 2018-01-17.
- Top 2% scientists in the world. 14 November 2020.