வி. மைத்ரேயன்
மரு வி. மைத்ரேயன் | |
---|---|
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 21 செப்டம்பர் 1955 சென்னை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | பா.ஜ.க, அ.தி.மு.க |
மருத்துவர் வாசுதேவன் மைத்ரேயன் (நவம்பர் 21, 1955) ஓர் இந்திய புற்று நோய்க்கட்டி மருத்துவர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினராக பணியாற்றியவர். மைத்ரேயன் இந்தியாவின் முதல்தர தகுதிவாய்ந்த புற்றுநோய்க்கட்டி மருத்துவர் என அறியப்படுகிறார்.
இளமைக்கால கல்வி
நவம்பர் 21, 1955 இல் வடகலை ஐயங்கார் குடும்பத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரரான கே. ஆர். வாசுதேவன் மற்றும் அவரது மனைவி மங்கா வாசுதேவன் ஆகியோருக்கு மைத்ரேயன் பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பை சென்னையில் பயின்றார். நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார். மைத்ரேயன் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன், சென்னை மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் மருத்துவத்திற்கான தனது எம்.டி படிப்பைத் தொடர்ந்தார், அதன் பின் சென்னை பல்கலைக்கழகத்தில் புற்று நோய் மருத்துவத்திற்கான டி.எம். படிப்பை முடித்தார்
மருத்துவ பணி
படிப்பை முடித்ததும், மைத்ரேயன் சிறிது காலம் புற்றுநோய் சிகிச்சை மருத்துவராக பணியாற்றினார். இவர் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவ பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அரசியல்
மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ராஷ்டிரிய சுயயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக ஆனார். 1995 முதல் 1997 வரை பா.ஜ.க யின் தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை மாநில தலைவராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் இவர் பாஜகவிலிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். 2023 சூன் மாதத்தில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
மேலும் பார்க்க
தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்