வி. திவ்வியராஜன்
Jump to navigation
Jump to search
வி. திவ்வியராஜன் (பி: வரணி, யாழ்ப்பாணம்) பாடகர், பாடலாசிரியர், நடிகர், கதாசிரியர், இசை அமைப்பாளர், திரைப்பட இயக்குனர் என்ற பல அடை மொழிகளுக்கு உரித்தானவர். இலங்கையில் ரூபவாகினி நடத்திய "உதயகீதம்" மெல்லிசைப்போட்டியில் கலந்து முதலிடம் பெற்றவர். அங்கே "கிராமத்துக் கனவுகள்" முதலான வானொலி நாடகங்களிலும் நடித்தவர். இவர் பாடிய, மெட்டமைத்த பல பாடல்கள் கனடாவில் இறுவட்டுக்களாக வந்திருக்கின்றன.
திரைப்படம்
இவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படங்கள்
இறுவட்டுக்கள்
- புலரும் வேளையில் - அருவி வெளியீடு
- புலரும் வேளையில் - சாந்தினி வர்மனுடன்
- சிறுநண்டு மணல் மீது - சங்கீதா திவ்யராஜனுடன்
- வெள்ளி சிணுங்கி - தனிப் பாடல்
- பாட்டனார் பண்படுத்தி - சாந்தினி வர்மனுடன்
- காற்றோடு பேசு - அருவி வெளியீடு
- ஊரான ஊரிழந்தோம் - தனிப் பாடல்
- அக்கரையில் நீயிருக்க - சாந்தினி வர்மனுடன்
- பேசாப் பொருள்.... (பாரதி பாடல்கள் - கவின் கலாலயா வெளியீடு)
- எனக்கு வேண்டும் - தனிப்பாடல்
- உலகத்து நாயகியே - சிறீதேவி பவநீதனுடன்
- செத்தபிறகு சிவலோகம் - தனிப் பாடல்
- அச்சமில்லை அமுங்குதல் இல்லை - மயூரன் தனஞ்செயனுடன்
- தேடிச் சோறு நிதம் தின்று - தனிப்பாடல்