வில்லியம்
எம். வில்லியம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | பொன்னப்ப நாடார் |
| பின்னவர் | என். டென்னிஸ் |
| தொகுதி | கிள்ளியூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 26 ஏப்ரல் 1903 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | வழக்குரைஞர் |
எம். வில்லியம் (William) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி கிராமத்தைச் சேர்ந்த இவர் இரண்டு முறை திருவாங்கூர்-கொச்சின் சட்ட மன்றத்திற்காகவும், மூன்று முறை சென்னை மாகாண சட்டசபைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு காங்கிரசு வேட்பாளராக அருமனை தொகுதியில் இருந்து 1952 தேர்தலில் போட்டியிட்டு திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1954ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழ்நாடு காங்கிரசு வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1957 மற்றும் 1962 தேர்தல்களிலும் விளவங்கோடு தொகுதியில் இருந்து மீண்டும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "1952 election for Travancore-Cochin assembly" (PDF). Archived from the original (PDF) on 2008-12-03. Retrieved 2022-09-25.
- ↑ "Interim Election to the Travancore-Cochin Assembly – 1954" (PDF). Archived from the original (PDF) on 2008-10-06. Retrieved 2022-09-25.
- ↑ 1957 Madras State Election Results, Election Commission of India
- ↑ 1962 Madras State Election Results, Election Commission of India
- ↑ 1967 Tamil Nadu Election Results, Election Commission of India
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
- திருவாங்கூர்-கொச்சி சட்டமன்ற உறுப்பினர்கள்
- 1 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 2 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 3 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 4 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்