விருந்து (பாட்டின் வனப்பு)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

விருந்து என்பது பாட்டின் வனப்புகளாமத் தொல்காப்பியம் காட்டும் 8 வனப்புகளில் ஒன்று.

விருந்து என்பது புதுமை. புதிதாக வந்தவரை விருந்தினர் என்கிறோம். புதுமையாகச் செய்யப்பட்ட யாப்பை விருந்து என்கிறோம்.[1]

முன்னவர் சொன்ன வழியில் சென்று புதிய யாப்பு நிழலை உண்டாக்குவது விருந்து என்னும் வனப்பு. [2]

திருக்குறளில் உள்ள குறள் வெண்பா நெறி தொல்காப்பியத்தில் உள்ளது. முதுமொழிக்காஞ்சியில் உள்ள ஓரடித் தொகுப்புப் பாடலமைதி விருந்து வனப்பு.

அடிக்குறிப்பு

  1. விருந்தே தானும்
    புதுவது கிளந்த யாப்பின் மேற்றே – தொல்காப்பியம் செய்யுளியல் 231

  2. விருந்தாவது, முன்னுள்ளார் சொன்ன நெறி போய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்றவாறு. புதிதாகப் புனைதலாவது, ஓருவன் சொன்ன நிழல்வழி அன்றித் தானே தோற்றுவித்தல். அது வந்தவாறு கண்டுகொள்க, இளம்பூரணர் விளக்கம்