விது பிரதாப்
விது பிரதாப் | |
---|---|
2011 ல் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த விழாவில் விது பிரதாப் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | விது பிரதாப் |
பிறப்பு | 1 செப்டம்பர் 1980 இந்திய ஒன்றியம், கேரளம், திருவனந்தபுரம் |
பிறப்பிடம் | திருவனந்தபுரம் |
இசை வடிவங்கள் | மலையாளம் |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர் |
இசைத்துறையில் | 1999–தறோபோது வரை |
விது பிரதாப் (Vidhu Prathap, பிறப்பு: 1, செப்டம்பர், 1980) என்பவர் ஒரு இந்திய பின்னணி பாடகராவார். இவர் மலையாளத்தில் நானூறுக்கும் மேற்பட்ட படங்களிலும், ஒரு சில தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
விது பிரதாப் 1980 இல் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள கைதமுக்கில் பிரதாபன், லைலா இணையருக்கு மகனாகப் பிறந்தார். திருவனந்தபுரத்தின் ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளியில் தனது துவக்கக் கல்வியைப் பயின்றார், பின்னர் திருவனந்தபுரம் கிறிஸ்து நகர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கிறிஸ்து நகரில் தனது பள்ளி நாட்களில், இவர் தனி நடிப்பு, பலகுரல் கலை ஆகியவற்றில் கலந்துகொண்டார். மேலும் பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். விது திருவனந்தபுரத்தின் மார் இவானியோஸ் கல்லூரியில் கல்லூரி மாணவர் சங்கத்தின், கலைக் கழக செயலாளராக இருந்தார். அக்கல்லூரியில் இவர் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். 1997-98 ஆம் ஆண்டில், தனது 17 வயதில், முன்னணி தனியார் தொலைக்காட்சியான ஏசியானெட் நடத்திய இசை போட்டியில் 'ஆண்டின் சிறந்த குரல் விருதை' வென்றார். இதன் பின்னர்தான் இவர் பாடகராக ஆவது பற்றி தீவிரமாக யோசித்தார். விது மூன்று வயதாக இருந்தபோது இசை பயில தொடங்கினார் மற்றும் பல இசை போட்டிகளில் வென்றுள்ளார்.
பின்னணி பாடல்
இவர் நான்காம் வகுப்பில் இருந்தபோது, பாதமுத்ரா என்ற திரைப்படத்திற்காக முதலில் பாடினார். ஆனால் இவருக்கு பெயரை வாங்கித் தந்தது 1999 ஆம் ஆண்டில் தேவதாசி திரைப்படத்தில் பாடிய 'பொன் வசந்தம்' பாடலாகும். அது பாரம்பரிய இசை சாயல் கொண்ட கடினமான பாடல் ஆகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் தீப்தி பிரசாத்தை 2008 ஆகத்தில் திருமணம் செய்து கொண்டார்.[1] தீப்தி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் தொழில்முறை பாரம்பரிய நடனக் கலைஞராவார்.[2]
விருதுகள்
இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் மிக முக்கியமானவை முதல் ஆசியநெட் குரல் விருதுக்கான விருது (1997), சயாஹனம் (2001) படத்திற்காக பாடிய பாடலான காலம் கைகுல்லுக நீ என்ற பாடலுக்காக சிறந்த பாடகருக்கான கேரள அரசு திரைப்பட விருது, நம்மள் (2002) படத்தின் பாடிய சுகமணி நிலாவு பாடலுக்காக ஆசியநெட்டின் சிறந்த ஆண் பாடகருக்கான விருது, 'சத்தியன் ஃபவுண்டேஷன்ஸ் விருது, ஜி.எம்.எம்.ஏ விருது, கிரிஸ்டல் சிம்பொனி தொலைக்காட்சி இளம் சாதனையாளர் விருது,[3] மற்றும் திரைப்பட விமர்சகர்கள் விருது (2012) ஆகியவை ஆகும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தலைப்பு | பங்கு | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|
ஐடியா ஸ்டார் சிங்கர் 2006 | தொகுப்பாளர் | ஏஷ்யாநெட் | |
ஐடியா ஸ்டார் சிங்கர் சீசன் 4 | அணி கேப்டன் | ஏஷ்யாநெட் | |
பாட்டுகளுடே பாட்டு | வினயன் | சூர்யா தொலைக்காட்சி | நடிப்பு அறிமுகம் |
சூர்யா சவால் | தொகுப்பாளர் | சூர்யா தொலைக்காட்சி | |
டாப் சிங்கர் | நடுவர் | பிளவர்ஸ் | |
சூப்பர் 4 பருவம் 2 | நடுவர் | மழவில் மனோரமா | |
கிலிவாதில் | பாடகர் | டி.டி மலையாளம் |
குறிப்புகள்
- ↑ S, Gautham (26 May 2020). "Just for laughs". தி நியூ இந்தியன் எக்சுபிரசு.
- ↑ "'വിവാഹ ഹാരം എടുത്തു നൽകിയത് യേശുദാസ്'; കല്യാണ ദിവസത്തെ ഓർമകളുമായി വിധു പ്രതാപ്". மலையாள மனோரமா (in മലയാളം). 13 July 2020.
- ↑ "Award for Yesudas". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 1 October 2010.