விஜய் தணிகாசலம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

விஜய் தனிகாசலம் (Vijay Thanigasalam, பிறப்பு: 8 மார்ச் 1989) என்பவர் இலங்கையில் பிறந்த ஒரு கனடிய அரசியல்வாதி ஆவார். இவர் 2025 மார்ச் 19 முதல் ஒன்ராறியோ மாகாணத்தின் மனநலம் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தன்மைக்கான இணை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். தணிகாசலம் ஒன்ராறியோ முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில், ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதிக்கான மாகாண நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார். இவர் 2018 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2023 முதல் மாகாண அமைச்சரவையில் இருந்து வருகிறார். 2018 -ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனணிகாசலம், 2023 முதல் மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். முதலில் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராகவும், பின்னர் வீட்டுவசதித் துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி, அதன்பின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் மனநலம் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தன்மைக்கான இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஒன்ராறியோ மாகாண அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் கனேடியத் தமிழர் ஆவார்.

துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்

1989-இல் இலங்கையில் பிறந்த தணிகாசலம், வல்வெட்டித்துறையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பித்து தனது தாயார், அண்ண் ஆகியோருடன் ஏழு வயதில் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வந்தார். அங்கிருந்து பின்னர் தன் 14 வயதில் கனடாவிற்கு குடியேறினார்.[1] இவர் பகுதி நேரமாக பல வேலைகளைச் செய்து கொண்டே புனித ஜோன் ஆஃப் ஆர்க் கத்தோலிக்க அகாடமியில் (அப்போது ஜீன் வானியர் கத்தோலிக்க மேல்நிலைப் பள்ளி என்று அழைக்கப்பட்டது) கல்வி பயின்றார். அந்த நேரத்தில், இவர் ஸ்கார்பரோவில் உள்ள பல சமூக அமைப்புகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கியதோடு, தன்னார்வலராகவும் பணியாற்றினார். தொடர்ந்து டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தில் பயின்ற இவர், பின்னர் ஒன்டாரியோ டெக் பல்கலைக்கழகத்தில் நிதியியல் துறையில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு, தனிதாசலம் டொராண்டோவில் உள்ள கனேடியன் இம்பிரியல் வங்கி மற்றும் கனேடியன் ராயல் வங்கி வங்கிகளில் பணியாற்றினார். 2024 -ஆம் ஆண்டில், குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்மித் வணிகப் பள்ளியில் தணிகாசலம் தனது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தை (MBA) நிறைவு செய்தார். [2]

அரசியல் வாழ்க்கை

ஸ்கார்பரோ மருத்துவ மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அகாதமி அமையவிருக்கும் தளத்தில் தணிகாசலம்

தசிகாசலம் முதன்முதலில் 2018--ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்ராறியோ தேர்தலில், ஒன்ராறியோ முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். 2018 -ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது, கனடாவில் தடைசெய்யப்பட்ட ஈழ விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தான் இட்ட முகநூல் பதிவுகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து, இவர் அதற்காக மன்னிப்பு கேட்டார். [3] 2021 யூன் 7 அன்று, தனிகாசலம் ஒன்ராறியோ சட்டமன்றத்திற்க்கு ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினராக (MPP) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019 -ஆம் ஆண்டில், போக்குவரத்துத் துறை அமைச்சரின் நாடாளுமன்ற உதவியாளராகத் தனித்தணிகாசலம் நியமிக்கப்பட்டார். இப்பொறுப்பில் இருந்துகொண்டு, தணிகாசலமும் அரசாங்கமும் இணைந்து 'ஸ்கார்பரோ சுரங்கப்பாதை நீட்டிப்புத்' திட்டத்தை அமைப்பதாக அறிவித்தனர்; இத்திட்டம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. [4] மேலும், கனடாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கனடிய தமிழர்கள் வசிக்கும் பகுதியான தனது தொகுதியான ஸ்கார்பரோரூஜ் பார்க்கில் தமிழ் சமூக மையத்தை அமைப்பதற்கான நிதியையும் தணிகாசலம் பெற்றுத் தந்தார். [5]

2022 -ஆம் ஆண்டில், இசுகார்பரோ மருத்துவமனை வலையமைப்பின் பழுதடைந்து வரும் உள்கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்காக, மாகாண அரசு வகுத்த ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்குத் தனித்தணிகாசலம் ஆதரவளித்தார். இத்திட்டத்திற்கான நிதியுதவியில், சென்டனரி மருத்துவமனையில் ஒரு புதிய அவசர சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கான திட்டங்களும், பிர்ச்மவுண்ட் மருத்துவமனையை முழுமையாக மறுசீரமைப்பதற்கான திட்டங்களும் அடங்கும். [6] மேலும்டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் ஸ்கார்பரோ மருத்துவ மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அகாதமி (SAMIH) எனும் கல்வி நிறுவனத்தை அறிவிப்பதிலும் தனித்தணிகாசலம் முக்கியப் பங்காற்றினார். ஸ்கார்பரோ பகுதியில் அமையவுள்ள முதலாவது மருத்துவக் கல்லூரியான இது, 1843 -ஆம் ஆண்டில் டொராண்டோ பல்கலைக்கழக மருத்துவ பீடம் நிறுவப்பட்டதிலிருந்து, டொராண்டோ நகரில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டமாகவும் இது திகழ்கிறது. [7]

தணிகாசலம் 2022 ஒன்ராறியோ பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, உள்கட்டமைப்பு அமைச்சரின் நாடாளுமன்ற உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

2023 செப்டம்பரில், தணிகாசலம் போக்குவரத்து இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். [8] இணை அமைச்சராக, தணிகாசலம் ஒன்ராறியோ ஒன் ஃபேர் திட்டத்தை செயல்படுத்துவதற்கும், ஒன்ராறியோ நார்த்லேண்ட் இரயில்வேயில் வருவாய் சேவையை மீண்டும் தொடங்குவதற்கும் பொறுப்பேற்றார். [9]

2024 சூன் 6 அன்று, தணிகாசலம் நகராட்சி விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் ஒரு பகுதியாக வீட்டுவசதி இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். [10]

2024 ஆண்டு நடைபெற்ற ஒன்ராறியோ பொதுத் தேர்தலுக்கான ஸ்கார்பரோ—ரூஜ் பார்க் தொகுதியின் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக தணிகாசலம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 49.17% வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது முந்தைய தேர்தலை விட 3.89% வாக்கு அதிகமாகும். [11]

2025 மார்ச் 19 அன்று, தணிகாசலம் சுகாதார அமைச்சகத்தின் ஒரு பகுதியாக மனநலம் மற்றும் போதைப்பொருள் பழக்கங்களுக்கான இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். [12]

மேற்கோள்கள்

  1. "After Fleeing Brutal Civil War, Ontario MPP Wants To Give Back To Canada". HuffPost (in ஆங்கிலம்). 2018-12-28. Retrieved 2022-12-10.
  2. "As my enriching MBA journey with the Smith School of Business at Queen's University comes to a close, I am filled with gratitude for the industry-leading professors, excellent administration, and the… | Vijay Thanigasalam | 50 comments". www.linkedin.com (in ஆங்கிலம்). Retrieved 2025-10-11.
  3. Bell, Stewart (6 June 2018). "Ontario PC candidate apologizes for Facebook posts praising terrorist group". Global News.
  4. "Ontario Newsroom". news.ontario.ca. Retrieved 2022-12-10.
  5. Government of Canada, Statistics Canada (2017-02-08). "2011 Census of Population - Data products". www12.statcan.gc.ca. Retrieved 2022-12-10.
  6. "Vijay Thanigasalam SHN Twitter Announcement". Twitter (in ஆங்கிலம்). Retrieved 2022-12-10.
  7. "'A historic moment': Event marks official launch of Scarborough Academy of Medicine and Integrated Health". University of Toronto News (in ஆங்கிலம்). Retrieved 2022-12-10.
  8. "Premier Doug Ford announces cabinet shuffle hours after third minister resigns in a month". CP24 (in ஆங்கிலம்). 2023-09-22. Retrieved 2023-09-22.
  9. "Associate Minister of Transportation tours ONTC". BayToday.ca (in ஆங்கிலம்). 2023-11-27. Retrieved 2024-06-07.
  10. "Ontario Newsroom". news.ontario.ca. Retrieved 2024-06-07.
  11. "Vijay Thanigasalam Acclaimed as Ontario PC Party Candidate for Scarborough-Rouge Park". PC Party of Ontario (in கனடிய ஆங்கிலம்). 2024-12-12. Retrieved 2025-01-24.
  12. "Ontario Newsroom". news.ontario.ca. Retrieved 2025-03-19.
"https://tamilar.wiki/w/index.php?title=விஜய்_தணிகாசலம்&oldid=497369" இலிருந்து மீள்விக்கப்பட்டது