விக்கி கிரிஷ்
Jump to navigation
Jump to search
விக்கி கிரிஷ் | |
---|---|
பிறப்பு | விக்னேஷ்கிருஷ்ணன் திசம்பர் 9 மதுரை, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை |
பணி | தொலைக்காட்சி நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஹரி பிரியா (2012-2019) |
உறவினர்கள் | சாய் பிருத்வி (மகன்) |
விக்கி கிரிஷ் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2007ஆம் ஆண்டு முதல் கானா காணும் காலங்கள் 2, வாணி ராணி (2013-2018) மற்றும் பொன்மகள் வந்தாள்[1] போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
விக்கி கிரிஷ் டிசம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தார். மதுரை சித்து மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்து மதுரை எம்.எஸ்.எஸ். வக்ஃப் போர்டு கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் 2011ஆம் ஆண்டு 'மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்' என்ற தொடரில் நடிகை ஹரி பிரியாவுடன் இணைத்து நடித்தார் அப்போது இருவரும் காதல் வயப்பட்டு நவம்பர் 30, 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சாய் பிருத்வி எனும் ஒரு மகன் உண்டு. 2019ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்கள்
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2007-2009 | கானா காணும் காலங்கள் 2 | விக்னேஷ் | விஜய் தொலைக்காட்சி |
2011 | பிரிவோம் சந்திப்போம் | ஜீ தமிழ் | |
2012 | மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் | ஜீ தமிழ் | |
2013-2018 | வாணி ராணி | கெளதம் | சன் தொலைக்காட்சி |
2013 | இலக்கணம் மாறுதோ | ஜெயா தொலைக்காட்சி | |
2014 | இளவரசி | செல்வா | ஜீ தமிழ் |
2018–ஒளிபரப்பில் | பொன்மகள் வந்தாள்[2] | கெளதம் | விஜய் தொலைக்காட்சி |
மேற்கோள்கள்
- ↑ "Vijay TV will launch a one-hour afternoon slot" (in English). bestmediainfo.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22.
- ↑ "விஜய் மேட்னி தொடர் - பொன்மகள் வந்தாள்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.