வாழ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வாழ்
இயக்கம்அருண் பிரபு புருசோத்தமன்
தயாரிப்புசிவகார்த்திகேயன்
கதைஅருண் பிரபு புருசோத்தமன்
இசைபிரதீப் குமார்
நடிப்பு
  • பிரதீப் அந்தோணி
  • டி. ஜே. பானு
  • திவா தவான்
  • அஹ்ரவ்
ஒளிப்பதிவுஷெல்லி காலிஸ்ட்
படத்தொகுப்புRaymond Derrick Crasta
கலையகம்
விநியோகம்சோனிலிவ்
வெளியீடுசூலை 16, 2021 (2021-07-16)
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ் (Vaazhl) என்பது அருண் பிரபு புருசோத்தமன் இயக்கிய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தை சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பதாகையின் கீழ் தயாரித்துள்ளார். இப்படத்தில் முதன்மையாக புதிய நடிகர்களும், குழுவினரும் இடம்பெற்றுள்ளனர். இதில் பிரதீப் அந்தோணி, டி. ஜே. பானு, திவா தவான், அஹ்ரவ், எஸ். என். பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை பிரதீப்குமார் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஷெல்லி காலிஸ்ட் மேற்கொள்ள, படத் தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிராஸ்டா செய்துள்ளார்.

இந்தப் படத்தை முதலில் 24 ஏஎம் ஸ்டுடியோவின் ஆர். டி. ராஜா தயாரிக்க முன்வந்தார். படத்தின் பணிகள் 2018 மே மாதத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் படத்தின் இயக்குநர் அருண் பிரபு வெளிப்புறப் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் அலைந்தார். இதனால் முதன்மை படப்பிடிப்புக்கான செயல்முறையில் தாமதம் ஏற்பட்டது. மேலும் ராஜா நிதிச் சிக்கலைக் குறிப்பிட்டு இந்தப் படத்தின் தயாரிப்பதில் இருந்து விலகினார். பின்னர் திரைப்படத் தயாரிப்பிற்கான உரிமைகளை சிவகார்த்திகேயன் 2019 சூன் மாதம் கையகப்படுத்தினார். படப்பிடிப்பு 2019 சனவரியின் நடுப்பகுதியில் தொடங்கி, சூலை மாதத்தில் 75 நாட்களுக்குள் நிறைவடைந்தது. இப்படமானது இந்தியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினி தீவுகள் போன்ற இடங்களின் 100 பகுதிகளில் படமாக்கப்பட்டது.

கோவிட் -19 பெருந்தொற்றால் திரையரங்குகள் மூடல் காரணமாக முன்னர் திட்டமிடப்பட்ட திரையரங்க வெளியீட்டில் வெளியிட மூடியாமல் போனதால், 2021 சூலை 16 அன்று சோனிலிவ் ஓடிடி தளத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் நடிகர்கள், கதைக்களம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டிய விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. என்றாலும் கதை ஆழத்தின் போதாமை, இரண்டாம் பாதியில் மெதுவான கதை நகர்வு ஆகியவை விமர்சனத்துக்கு ஆளானது.

கதை

சலிப்பு மிக்க வாழ்க்கை நடத்தும் ஒரு மென்பொருள் நிறுவன ஊழியர் மாறுபட்ட ஆளுமைகளைக் கொண்ட இரண்டு பெண்களைச் சந்தித்த பின்னர் பல திருப்பங்களை எதிர்கொள்கிறார்.

நடிகர்கள்

  • பிரதீப் அந்தோணி பிரகாசாக
  • டி. ஜே. பானு யாத்ரம்மமாக
  • திவா தவான் தான்யாவாக
  • அஹ்ரவ் யாத்ராவாக
  • எஸ். என். பட்

தயாரிப்பு - வளர்ச்சி

அருவி படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, இயக்குனர் அருண் பிரபு புருசோத்தமன் தனது இரண்டாவது படத்திற்கான முன் தயாரிப்பு மற்றும் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டார், என்றாலும் இது படமாக்கப்படவில்லை.[1] இக் கதை மிகவும் சிக்கலானது மேலும் திரையாக முழுமையாக மாற்றுவதும் எளிதான செயல் அல்ல என்றும், இதை எழுத அதிக நேரம் எடுத்தது என்றும் அவர் கூறினார். இக்கதையை நடிகர் சிவகார்த்திகேயனிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் இதை எழுதுவதற்கு முன்பே விவரித்தார். அருணின் கதைகளால் ஈர்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் இறுதியில் அக்கதையை படமாக தயாரிக்க ஒப்புதல் அளித்தார். ஆனால் அது திட்டமிட்டபடி நடக்கவில்லை.[1]

2018 மே 29 அன்று, 24 ஏஎம் ஸ்டுடியோவின் திரைப்பட தயாரிப்பாளர் ஆர். டி. ராஜா, அருவி பிரபுவுடன் இணைந்து தங்கள் அடுத்த படத்தை அறிவித்தார், இது அருவிக்கு ஒத்த கலப்பு வகை படம் என்று கூறப்பட்டது.[2] பிரபு தனது முதல் படத்திலிருந்து அதே தொழில்நுட்பக் குழுவினரைத் இதிலும் வைத்துக் கொண்டார், இதில் ஷெல்லி காலிஸ்ட், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா மற்றும் ஸ்ரீராமன் ஆகியோர் முறையே ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக இருப்பார்கள் என்று ஆனது. ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து தயாரிப்பாளர்களால் சொல்லப்படவில்லை.[3] தயாரிப்பின் போது, 2019 சூனில், படத்தின் தயாரிப்பாளர் ராஜா தனது தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் நிறுவனத்துக்ககு ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் காரணமாக படத்திலிருந்து விலகினார். இது நிறுவனத்தின் பிற படங்களையும் பாதித்தது.[4] அதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன், தனது இரண்டாவது தயாரிப்பான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாவின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது அருண் பிரபுவின் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்சின் மூன்றாவது படமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.[5] படத்தின் முதல் பார்வை 27 ஜூன் 2019 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, படத்தின் தலைப்பை வாழு என்று அறிவித்தனர் .[6]

படப்பிடிப்பு

இப்படத்திற்கான முறையான பூசை மே 30 அன்று தேனியில் அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது.[7] 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் படம் தொடங்கப்பட்ட போதிலும், அருண் பிரபு மற்றும் அவரது குழுவினர் படப்பிடிப்புக்கான இடங்களை கண்டறிய ஒன்பது மாதங்கள் எடுத்துக் கொண்டதால் , படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2019 சனவரியில் அமைதியாக முன்னேறின.[8] படக் குழுவினர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த படத்தில் புதியவர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் போர்ட்டலுக்கு அளித்த பேட்டியில், பிரபு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் முழுவதும் இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத 100 இடங்களிலும், இந்தோனேசியா , பப்புவா நியூ கினியாவில் உள்ள பல தீவுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.[9][10] இது படத்தில் ஒரு ஆச்சரியமான அம்சமாக இருந்தது. படத்தின் ஒரு பகுதி முந்தைய தலைமுறை திரைப்பட ஒளிப்படமியைக் கொண்டு படமாக்கப்பட்டது. பிரபுவின் கூற்றுப் படி, படத்தின் திரைக்கதையின் வெவ்வேறு பகுதிகளை படமாக்க குழு வெவ்வேறு ஒளிப்படமிகளைப் பயன்படுத்தியது. 1930 களை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு காட்சி அமைப்புக்கு, அந்த காலகட்டத்தை தெளிவாகக் காண்பிப்பதற்கான சிறந்த வழியாக திரைப்பட ஒளிப்படமியைப் பயன்படுத்தினர்.[11] 75 நாட்களில் நடந்த படத்தின் படப்பிடிப்பு 2019 சூலையில் முடிக்கப்பட்டது,[12] படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தொடங்கியது, இருப்பினும் படத்தின் குரல் சேர்ப்பு பணிகள் அக்டோபர் 2019 இல் தொடங்கியது.[13][14]

இசை

இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன், முத்துமணி, குட்டி ரேவதி ஆகியோர் எழுதினர்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆஹா"  பிரதீப் குமார் 5:01
2. "முதல் தரிசனம்"  பாரதி சங்கர், பிரதீப் குமார், ஷாஹித் ஹமீத் 2:51
3. "உணர்ச்சிப் பாடல்"  தேவா 3:02
4. "இன்ப விசை"  பிரதீப் குமார், லலிதா விஜயகுமார் 2:55
5. "புதுவித அனுபவம்"  பிரதீப் குமார், கல்யாணி நாயர் 4:10
6. "செம்மான் மகளை"  பிரதீப் குமார் 4:16
7. "வாழ வா"  பிரதீப் குமார், Radar with A Kay 5:23
8. "வாழி" (கருப்பொருள்)இசைக்கருவி 4:54
9. "நான்"  பிரதீப் குமார் 5:57
மொத்த நீளம்:
38:29

வெளியீடு

வாழ் படத்தை முதலில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கோவிட் -19 பெருந்தொற்றினால் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக, தயாரிப்பாளர்கள் பிரபலமான எண்ணியில் ஓடிடோ தளமான சோனிலிவ் வெளியிட அதனுடன் கலந்துரையாடினர்.[15] பின்னர், படமானது தணிக்கை வாரியத்துக்கு அனுப்பப்பட்டது, அங்கு 114 நிமிட இயங்கு நேர படத்திற்கு யு / ஏ சான்றிதழைப் பெற்றது. [16] இந்த படம் 2021 சூலை 16 அன்று சோனிலிவ் மூலம் நேரடியாக வெளியிடப்பட்டது.[17]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Stories like Aruvi never go out of fashion: Director Arun Prabhu Purushothaman". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  2. "Aruvi director's next, a 'mixed genre film'". The New Indian Express (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  3. "24 AM Studios to bankroll 'Aruvi' director Arun Prabhu's next - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  4. "Sivakarthikeyan's next with Aruvi director Arun Prabhu!". www.moviecrow.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  5. "Sivakarthikeyan's next production with director Arun Prabhu - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  6. "Sivakarthikeyan announces third production venture titled Vaazhl; film to be helmed by Aruvi director Arun Prabu - Entertainment News, Firstpost". Firstpost. 2019-06-27. பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  7. "Aruvi director Arun Prabu's second film to be produced by 24AM Studios". Behindwoods. 2018-05-29. பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  8. "The narrative of Vaazhl will be musical: Arun Prabu - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  9. "Vaazhl is a mixed genre like Aruvi: Arun Prabhu - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  10. "Aruvi director's 'Vaazhl' shoot wrapped! Shot in more than 100 locations". Sify (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  11. "Arun shoots a part of Vaazhl using film camera - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  12. "Aruvi director's 'Vaazhl' shoot wrapped! - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  13. "'Vaazhl' kick-starts dubbing works; See pics - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  14. "Sivakarthikeyan and Arun Prabhus Vaazhl dubbing started". Behindwoods. 2019-10-10. பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  15. "Karthick Naren's Naragasooran and Arun Prabhu's Vaazhl to release on OTT?". India Today (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
  16. "Arun Prabhu's 'Vaazhl' to have an OTT release? - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
  17. "Vaazhl to release on SonyLIV". The New Indian Express (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வாழ்&oldid=37519" இருந்து மீள்விக்கப்பட்டது