வார் (2019 திரைப்படம்)
| வார் | |
|---|---|
| இயக்கம் | சித்தார்த் ஆனந்த் |
| தயாரிப்பு | ஆதித்யா சோப்ரா |
| கதை | சித்தார்த் ஆனந்த் |
| திரைக்கதை | ஸ்ரீதர் ராகவன் |
| இசை | விஷால்–சேகர் |
| நடிப்பு | ஹிரித்திக் ரோஷன் டைகர் ஷெராப் வாணி கபூர் |
| ஒளிப்பதிவு | பெஞ்சமின் ஜாஸ்பர் |
| படத்தொகுப்பு | ஆரிப் ஷேக் |
| கலையகம் | யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் |
| விநியோகம் | யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் |
| வெளியீடு | 2 அக்டோபர் 2019 |
| ஓட்டம் | 154 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
| ஆக்கச்செலவு | ₹150 கோடி [1][2] |
| மொத்த வருவாய் | ₹475 கோடி [3] |
வார் (War) என்பது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ரா பிலிம்ஸின் கீழ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் 2019- ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழி அதிரடிப் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். ஒய். ஆர். எஃப் ராஜ் உளவு திரைப்படத் தொடரின் மூன்றாவது படமாகும்.மூன்றாவது பாகத்தில், கிருத்திக் ரசன், டைகர் ஷெராஃப் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். வாணி கபூர், அசுதோஷ் ராணா ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதைச் சுருக்கம்
இந்திய ராணுவத்தின் திறமையான ரகசிய முகவரான கபீர் திடீரென தன் அமைப்புக்கு எதிராகச் செயல்படத் தொடங்குகிறார். அவரைக் கண்டுபிடித்துத் தடுக்க, அவரது முன்னாள் மாணவரும் சிறந்த வீரருமான கலீத் நியமிக்கப்படுகிறார். கபீரைப் பிடிக்க முயலும் கலீத், பல்வேறு இடங்களில் நடந்த சண்டைகள், ரகசிய நடவடிக்கைகள் மூலம் அவரது செயல்களின் பின்னணி குறித்து அறிகிறார். கபீர் உண்மையில் நாட்டிற்குத் துரோகம் செய்யவில்லை; மாறாக, நாட்டை ஆபத்துக்கு உள்ளாக்கிய உயர்மட்ட குற்றவாளிகளை அழிக்க முயல்கிறார் என்பது தெரிய வருகிறது. இதற்கிடையில், கபீரின் நெருங்கிய தோழி நைனா கொல்லப்படுகிறார். இறுதியில், கபீர், கலீத் இணைந்து துரோகியாக இருந்த ராணுவ அதிகாரியை எதிர்கொள்கிறார்கள். கடுமையான மோதலுக்குப் பிறகு அவர் கொல்லப்படுகிறார். பின்னர் கபீர் மறைமுகமாக வாழத் தொடங்க, கலீத் புதிய ரகசிய முகவராக தனது பணியை தொடர்கிறார்.
கதை மாந்தர்கள்
- கிரித்திக் ரோஷன் – மேஜர் கபீர் தாலிவால், ரா முகவர், முதன்மை கதாநாயகன்
- டைகர் ஷெராப் இரட்டை வேடங்களில்
- கேப்டன் காலித் ரஹ்மானி, கபீரின் சீடர், இரண்டாம் நிலை கதாநாயகன்
- ஆயான் சுபைர் – இளம் காலித்
- கேப்டன் சௌரப் பாட்டில் (முக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு), முதன்மை எதிர்மறைக் கதாப்பாத்திரம்
- கேப்டன் காலித் ரஹ்மானி, கபீரின் சீடர், இரண்டாம் நிலை கதாநாயகன்
- வாணி கபூர் – நைனா சாஹ்னி, ரூஹியின் தாய்
- ஆசுதோஷ் ராணா – கர்னல் சுனில் லூத்ரா, ரா அமைப்பின் இணைச் செயலாளர்
- அனுப்ரியா கோயங்கா – கேப்டன் அதிதி நஹ்தா, கபீரின் அணித்துணை
- யஷ் ராஜ் சிங் – கேப்டன் சௌரப் பாட்டில், இல்யாசியின் ரகசிய உதவியாளர் (முக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு)
- சஞ்சீவ் வத்சா – ரிஸ்வான் இல்யாசி
- மசூர் அம்ரோஹி – பீரோஸ் கான்ட்ராக்டர் / ரிஸ்வான் இல்யாசி (மறைமுக தோற்றத்தில்)
- சோனி ரஸ்தான் – நஃபிசா ரஹ்மானி, காலித்தின் தாய்
- திபன்னிதா ஷர்மா – டாக்டர் மல்லிகா சிங்கால், முக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்
- ஆரிப் ஜகரியா – டாக்டர் உத்பல் பிஸ்வாஸ்
- மோகித் சௌஹான் – வி. கே. நாயுடு, ஓய்வு பெற்ற ரா முகவர்
- அமித் கவுர் – லெப்டினன்ட் கர்னல் ஜிம்மி ஷெராப், பாரா எஸ்.எப்.
- திசிதா சேகல் – ரூஹி, நைனாவின் மகள்
- ஜெஸ்ஸி லீவர் – முத்து, கபீரின் அணித்துணை
- இம்ரான் அஹ்மத் – சைனி
- ஸ்வரூபா கோஷ் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷெர்னா பட்டேல்
- அனில் கோப்கர் – இந்திய பிரதமர்
- ரவி அவானா – பஷீர் ஹஸிப்
- கீத் டாலிசன் – பரீத் ஹக்கானி
மேற்கோள்கள்
- ↑ "WAR (2019)". British Board of Film Classification. Archived from the original on 27 September 2019. Retrieved 27 September 2019.
- ↑ "Certificate detail". Central Board of Film Certification. Archived from the original on 5 April 2023. Retrieved 20 April 2022.
- ↑ "War Box Office". Bollywood Hungama. 2 October 2019. Archived from the original on 15 July 2019. Retrieved 3 October 2019.