வாய்வழிப் பாலுறவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (ஆங்கிலம்:Oral sex) என்பது வாய், நாக்கு என்பவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்னரான அல்லது பின்னரான பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். வாய்வழிப் புணர்ச்சியில் விந்துப் பாய்மம் அல்லது யோனிப் பாய்மம் உள்ளெடுக்கப்படுவது ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு உள்ளெடுப்பது மட்டும் வாய்வழிப் பாலுறவாகக் கருதப்படுவதில்லை. வாய்வழிப் பாலுறவினைப் புணர்ச்சி அல்லது முழுமையான பாலுறவாகப் பலரும் கருதுவதில்லை.[சான்று தேவை]
நேர்பாலுறவிலும் எதிர்பாலுறவிலும் வாய்வழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. இதனால் கருத்தரிக்க வாய்ப்பில்லையாதலால் கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. ஆயினும் இது பாதுகாப்பான பாலுறவு அல்ல.[சான்று தேவை]
வாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் இருவர் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பாலின்பத்தினை வழங்க முடியும். அது 69 எனும் பாலுறவு நிலையில் சாத்தியமாகிறது.