வாணி (ஓவியர்)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வாணி |
---|---|
பிறப்புபெயர் | வெங்கடரமணி |
பிறந்ததிகதி | 1928 |
இறப்பு | திசம்பர் 18, 2017 |
அறியப்படுவது | ஓவியர் |
வாணி (1928 - 18 திசம்பர் 2017) என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவருடைய இயற்பெயர் வெங்கடரமணி என்பதாகும்.[1] இவருக்கு "வாணி" என பெயரிட்டவர் தேவன்.[1] திருவாரூர் வித்வான் பாலசுப்ரமணியம் என்பவரிடம் கருநாடக இசையைக் கற்றார். மூன்று முறை மேடைக் கச்சேரி செய்துள்ளார்.
வீட்டுக்குத் தெரியாமல் நாற்பது ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் நடிக்கச் சென்றார். அங்கு ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தா மணியில் நடித்தார். மன்னார்குடி டி. என். பரமேஸ்வரனிடம் முதலில் ஓவியம் கற்றார். விகடனில் சேர்ந்த போது இவருக்கு 'வாணி' என்ற பெயரைச் சூட்டியவர் அமரர் தேவன். வாணி ஆனந்த விகடன் இதழில் ஓவியராக பணியாற்றினார்.
ஜானகி என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வாணி 18 டிசம்பர் 2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Correspondent, Vikatan. "எல்லா நாளும் தீபாவளி!". vikatan.com. https://www.vikatan.com/literature/arts/112759-diwali-celebrations.
- ↑ https://patrikai.com/famous-tamil-artist-vani-passes-away/ வாணி இறந்தார்