வாசுதேவன் ஞான காந்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வாசுதேவன் ஞான காந்தி
இயற்பெயர்/
அறியும் பெயர்
வாசுதேவன் ஞான காந்தி
Vasudevan Gnana Gandhi
பிறந்தஇடம் வடுவார்பட்டி, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பணி வான்வெளிப் பொறியியலாளர் 2006
குறிப்பிடத்தக்க விருதுகள் பத்மசிறீ
இந்திய ஏரோநாட்டிகல் சமூக விருது

வாசுதேவன் ஞான காந்தி (Vasudevan Gnana Gandhi) என்பவர் ஓர் இந்திய வான்வெளிப் பொறியியல் அறிவியலாளர் ஆவார். இவர் இந்தியாவில் கடுங்குளிர் ஏவூர்தி இயந்திர அறிவியலின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார். [1] மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்ற காந்தி, 1968 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் இஸ்ரோவில் திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். ஜி. எஸ். எல். வி. வாகனத்தின் உந்து திரவ நிலைகளின் வளர்ச்சி மற்றும் விகாஸ் இயந்திரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் பின்னணியில் இவரது பங்களிப்புகள் உள்ளது. ஏரோநாட்டிகல் இந்தியச் சமூக விருதைப் பெற்றவர். காந்திக்கு 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமை விருதான, பத்மசிறீயினை வழங்கி கவுரவித்தது.[2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "ASI". ASI. 2014. பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
  2. "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.

 

"https://tamilar.wiki/index.php?title=வாசுதேவன்_ஞான_காந்தி&oldid=25520" இருந்து மீள்விக்கப்பட்டது