வயசு பசங்க
வயசு பசங்க (Vayasu Pasanga) பாரதி கண்ணன் இயக்கத்தில், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மஹா தேவராஜ் தயாரிப்பில், ஆர். கே. சுந்தர் இசை அமைப்பில், 6 பிப்ரவரி 2004 ஆம் தேதி வெளியானது. அனுஷ், ஜெய் அரவிந்த், மாஸ்டர் மணிகண்டன், விந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3][4]
நடிகர்கள்
அனுஷ், ஜெய் அரவிந்த், மாஸ்டர் மணிகண்டன், விந்தியா, லிவிங்ஸ்டன் (நடிகர்), கமலேஷ், பாயல், பாரதி, ஆஷா, வினு சக்ரவர்த்தி, கௌசல்யா செந்தாமரை, பாலு ஆனந்த், கே.ஆர்.வத்சலா, நடராசன், அஞ்சலி தேவி, பாரதி கண்ணன், கிறேன் மனோகர், பாவா லட்சுமணன், ஸ்ரீலதா, பெஞ்சமின், ராஜன், சிவநாராயணமூர்த்தி, கணேஷ் ஆச்சார்யா, சுஸ்மிதா, அபிநயஸ்ரீ.
கதைச்சுருக்கம்
விக்கி, பழனி, லட்சுமிபதி ஆகிய மூன்று நண்பர்களை சுற்றி நடக்கும் கதை. பள்ளி வகுப்புகளை தவிர்த்துவிட்டு, பெண்களை நோட்டம் விடுவதே அவர்களது பிரதான வேலையாக இருந்தது. ஆனாலும் அவர்களால் எந்த பெண்ணையும் அவர்கள் வசப்படுத்த இயலவில்லை.
அந்நிலையில், வயதான கணவருடன், நந்தினி (விந்தியா) குடிவருகிறாள். நந்தினியின் அழகிலும் கவர்ச்சியிலும் மயங்கிய மூவரும் அவளுக்காக எதுவும் செய்ய தயாராக இருந்தனர். அதை தெரிந்துகொண்ட நந்தினி, தன் கணவன் தேவராஜூவை கொல்லச் சொல்கிறாள். அந்த மூவரும் பல முறை கொல்ல முயன்றும், தோல்வி தான் மிஞ்சியது. ஆனால், தேவராஜு கொல்லப்படுகிறார். அதில் எந்த தொடர்பும் இல்லையென்றாலும், கொலை பழி அந்த மூவரின்மேல் விழுந்து, சிறைசெல்ல நேரிடுகிறது. பின்னர் என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.
தயாரிப்பு
இந்தத் திரைப்படம் "காதல் பண்ணும் வயசு" என்று துவக்கத்தில் பெயரிடப்பட்டாலும், பின்னர், வயசு பசங்க என்று பெயர் மாற்றப்பட்டது.[5]
ஒலிப்பதிவு
இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் ஆர்.கே. சுந்தர் ஆவார். கிருதியா, கலைக்குமார், வைகை செல்வன், விவேகா, புண்ணியா ஆகியோர் பாடல் ஆசிரியர்கள் ஆவர். ஏழு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 2004 ஆம் ஆண்டு வெளியானது.[6][7]
வெளியீடு
இந்திய தணிக்கை குழு இப்படத்திற்கு "ஏ" சான்றிதழ் வழங்கியது.[5]
விமர்சனம்
படத்தின் கதை கடைசி 40 நிமிடங்களில் தான் துவங்குவதாகவும், கொச்சை நிறைந்த காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், எதிர்மறை விமர்சனத்தை பெற்றது.[8][9]
மேற்கோள்கள்
- ↑ "https://spicyonion.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.gomolo.com". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.cinesouth.com". Archived from the original on 2004-11-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.jointscene.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ 5.0 5.1 "http://www.behindwoods.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://mio.to". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.hungama.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.thehindu.com". Archived from the original on 2004-11-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.sify.com".
{{cite web}}
: External link in
(help)|title=