வந்தே மாதரம் (பாடல் தொகுப்பு)
வந்தே மாதரம் | |
---|---|
இசைத் தொகுதி
| |
வெளியீடு | ஆகஸ்ட் 12, 1997 |
ஒலிப்பதிவு | 1997 |
இசைப் பாணி | உலக இசை, இந்திய பாப் இசை, நாட்டுப்புற இசை[1] |
நீளம் | 55:25 |
இசைத்தட்டு நிறுவனம் | கொலம்பியா |
இசைத் தயாரிப்பாளர் | ஏ.ஆர்.ரகுமான், கனிகா, பரத் பாலா |
வந்தே மாதரம் (Vande Mataram (album)) பாடல் தொகுப்பு இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்திய சுதந்திரத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவைக் குறிக்கும் விதத்தில் வெளியிடப்பட்டது. இந்திய இசைத்துறையில் சினிமாப் பாடல் தவிர்த்து அதிகம் விற்பனையான இசைத்தொகுதி எனும் சிறப்பை இது பெற்றது.[2] இது 'சோனி இசை நிறுவனம் வெளியிட்ட இசைத்தொகுதியாகும்.
இந்த இசைத்தொகுதி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்பாடல்கள் இந்திய ஒருமைப்பாட்டையையும் ஒற்றுமையையும் குறிக்கும் வண்ணம் இருந்தன. பிபிசி உலக சேவை உலகம் முழுவது உள்ள 7000 பாடல்களில் இந்த இசைத்தொகுப்பில் உள்ள மா துஜே சலாம் எனும் பாடலுக்கு இரண்டாவது இடம் கொடுத்திருந்தது.[3] சிறந்த திரைஇசை தவிர்த இசைத்தொகுப்பிற்கான ஸ்க்ரீன் வீடியோகான் விருது இந்த இசைத் தொகுதிக்கு 1997-ல் கிடைத்தது.[4]
உருவான விதம்
1996 -ல் ரகுமான் விருது பெறுவதற்காக மும்பை (பம்பாய்) தனது நண்பர் பரத் பாலா -வை சந்தித்து உரையாடியபோது இந்த இசைத்தொகுப்பை உருவாக்கும் திட்டம் விவாதிக்கப்பட்டது. அதே நேரம் சோனி நிறுவனமும் இந்தியாவில் நுழைய விரும்பியது. எனவே அவர்களே இந்த இசைத்தொகுப்பைத் தயாரித்தனர். பின்னர் உலகம் முழுவதும் 28 நாடுகளில் இந்த இசைத்தொகுதி வெளியிடப்பட்டது.
தயாரிப்பு விவரம்
- தயாரிப்பாளர்- ரகுமான், கனிகா, பரத் பாலா
- பொறியியலாளர்கள் -ஸ்ரீதர், பால் ரைட், சிவகுமார்
- கலவை - ஸ்ரீதர்
- நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு -ரகுமான் , யாக் பான்டி
கலை
- கலை இயக்கம்-சுனில் மஹாதிக்
- ஓவியம் -தோட்டா தரணி
- புகைப்படம் -தேஜல் பாட்னி
- உள் வடிவம்- மஞ்சரி
மேற்கோள்கள்
- ↑ "A.R. Rahman – Vande Mataram". Discogs. பார்க்கப்பட்ட நாள் 23 July 2012.
- ↑ Salma Khatib (22 September 2000). "Indi-pop: Down But Not Out". Screen India. பார்க்கப்பட்ட நாள் 2011-04-28.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ The Worlds Top Ten — BBC World Service
- ↑ "Screen Videocon Award Winners". Screen India. 1997-01-23. பார்க்கப்பட்ட நாள் 2011-04-09.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)