வத்சல் சேத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வத்சல் சேத்
வட்சால் சேத்.jpg
பிறப்பு5 ஆகத்து 1980 ( 1980 -08-05) (அகவை 44)
மும்பை, இந்தியா
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்

வத்சல் சேத் (குசராத்தி: વત્સલ શેઠ, இந்தி: वत्सल शेठ) (பிறப்பு: 5 ஆகஸ்ட் 1980) ஒரு இந்திய நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஜஸ்ட் மொஹபட் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு டார்சன் : வொண்டர் கார் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். இவர் தற்பொழுது ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஏக் ஹசினா தி என்ற தொடரில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். இவர் 2008ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக் குறிப்பு

வத்சல் சேத் குசராத்தி பெற்றோருக்கு 1980 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5 ஆம் தேதியன்று மும்பையில் பிறந்தார்.[1] குடும்பத்தில் இருந்த இரண்டு உடன்பிறப்புகளில் இவர் மூத்தவர் ஆவார். சைவ உணவுப் பிரியராகவும் [2] மதுவைப் பயன்படுத்தாதிருக்கும் கொள்கை கொண்டவராகவும் இவர் அறியப்படுகிறார்.[3]

திரைப்படங்கள்

  • 2004: டார்சன் : வொண்டர் கார்
  • 2007: நன்ஹி ஜெய்சால்மர்
  • 2008: பொம்மலாட்டம்
  • 2008: ஹீரோஸ்
  • 2009: Paying Guests
  • 2010: Toh Baat Pakki
  • 2011: ஹோஸ்டேல்
  • 2012: Uncoupled
  • 2014: ஜெய் ஹோ

சின்னத்திரை

  • 1996-200: ஜஸ்ட் மொஹபட்
  • 2014-  : ஏக் ஹசினா தி

உதவி இயக்குநர்

  • 2008: The Cheetah Girls: One World

தயாரிப்பாளர்

  • 2008: சொறி பாய் (Sorry Bhai)

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Wikilogo.JPG
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
வத்சல் சேத்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=வத்சல்_சேத்&oldid=22118" இருந்து மீள்விக்கப்பட்டது