வண்ணார பரதேசி சுவாமிகள்

வண்ணார பரதேசி சுவாமிகள் என்பவர் என்பவர் புதுச்சேர் வில்லியனூரில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமகாலத்தில் வாழ்ந்தார். வில்வக்காட்டில் வாழ்ந்து வந்தார். இவர் நவகண்ட யோகத்தினை செய்கையில் கை, காலென உறுப்புகள் தனித்தனியாக கிடப்பதை பார்ததவர்கள் பயந்து போனார்கள்.[1] அவர்கள் சென்று ஊர் மக்களை அழைத்து வரும்போது, வண்ணாரப் பரதேசி சுவாமிகள் முழு உடலுடன் இருந்தார். இவர் வாழ்ந்த வில்வக் காடானது வில்லிலியனூர் என்று அழைக்கப்படுகிறது.[1]

அதன் பிறகு பரதேசி சித்தரை வணங்கிவந்தனர். மீனவர்கள் இவரை வணங்கியப் பின்னே வியாபாரத்திற்கு சென்றார்கள்.[1] இவர் மண்ணை எடுத்து தந்தால் அன்றைக்கு மீன்கள் அனைத்தும் விற்பனையாகிவிடும். நோயுற்ற மக்களுக்கு மண் பூசி குணப்படுத்தியுள்ளார்.[1]

இவர் மறைந்ததும், இவரது சமாதியில் லிங்கத்தினை பிரதிஸ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.[1]

சமாதி

பரதேசிச் சித்தர் சமாதி புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1][2]

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=வண்ணார_பரதேசி_சுவாமிகள்&oldid=27990" இருந்து மீள்விக்கப்பட்டது