வண்ணநிலவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வண்ணநிலவன்
வண்ணநிலவன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வண்ணநிலவன்
பிறப்புபெயர் உ. ராமச்சந்திரன்
பிறந்ததிகதி (1949-12-15)15 திசம்பர் 1949
பிறந்தஇடம் தாதன்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு  இந்தியா
பணி எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியச் சிந்தனை
தமிழ் வளர்ச்சி கழக பரிசு
ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது
பெற்றோர் உலகநாதபிள்ளை
இராமலட்சுமி அம்மாள்
துணைவர் சுப்புலட்சுமி (1977 - தற்போது வரை)
பிள்ளைகள் ஆனந்த் சங்கர்
சசி
உமா

வண்ணநிலவன் (Vanna Nilavan, பிறப்பு: திசம்பர் 15, 1949) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம், தாதன்குளம் இவரது சொந்த ஊர்.திருநெல்வேலியில் பிறந்த இவரின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன் ஆகும். இவர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி , ஸ்ரீ வைகுண்டம் ஆகிய ஊர்களில் படித்தார1973-ல் சென்னைக்கு வேலை தேடி வந்தார். கண்ணதாசன்,கணையாழி,புதுவைக்குரல் போன்ற பத்திரிகைகளிலும், 1976-ல் துக்ளக் பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் சிறிது காலம் வேலை பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

குடும்பம்

இவரின் தந்தை உலகநாதபிள்ளை, தாய் இராமலட்சுமி அம்மாள். இவரின் பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர் ராமச்சந்திரன் ஆகும். இவர்களது சொந்த ஊர் திருநெல்வேலி. இவரின் பள்ளிப் பருவத்துக்குப் பிறகு பணி காரணமாகத் தாதன்குளம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களில் வண்ணநிலவன் வசித்துள்ளார். இவர் ஏப்ரல் 07, 1977 அன்று சுப்புலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

படைப்புகள்

இவர் எழுதிய புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை நூல்களாக வெளி வந்திருக்கின்றன.

நாவல்கள்

  1. நேசம் மறப்பதில்லை நெஞ்சம்.[1]
  2. கடல்புரத்தில்[2]
  3. கம்பா நதி ,
  4. ரெயினீஸ் ஐயர் தெரு
  5. உள்ளும் புறமும்
  6. காலம்
  7. எம். எல்

சிறுகதைத் தொகுதிகள்

  1. எஸ்தர்[3]
  2. பாம்பும் பிடாரனும்[4]
  3. தர்மம்
  4. உள்ளும் புறமும்
  5. தாமிரவருணிக் கதைகள்
  6. வண்ணநிலவன் கதைகள்
  7. கரையும் உருவங்கள்

கவிதைத் தொகுதிகள்

  1. மெய்ப்பொருள்
  2. காலம்

பிற படைப்புகள்

விருதுகள்

  1. இலக்கியச் சிந்தனை[5]
  2. தமிழ் வளர்ச்சி கழக பரிசு[சான்று தேவை]
  3. ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது[சான்று தேவை]
  4. சாரல் விருது,
  5. எஸ். ஆர். வி. பள்ளி விருது,
  6. வாலி விருது,
  7. ஜெயகாந்தன் விருது,
  8. பெரியசாமி தூரன் விருது,
  9. கோவை கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது,
  10. கண்ணதாசன் கழக விருது,
  11. விளக்கு விருது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வண்ணநிலவன்&oldid=5779" இருந்து மீள்விக்கப்பட்டது