வசப்புத்தூர் காசி விசுவநாதர் கோயில்
Jump to navigation
Jump to search
வசப்புத்தூர் காசி விசுவநாதர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் வசப்புத்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக காசி விசுவநாதர் உள்ளார். இறைவி காசி விசாலாட்சி ஆவார்.[1]
அமைப்பு
திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தியும், கோஷ்டத்தில் சண்டிகேசுவரரும், துர்க்கையும் உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தென் பகுதியிலிருந்து வருவோர் வருமிடங்களில் சற்று இளைப்பாற கோயிலில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் இவரை வழிபட்டுச் செல்ல ஆரம்பித்தனர்.[1]
விழாக்கள்
பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் கொண்டாப்படுகின்றன.[1]