வசந்த ராணி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Tabebuia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
வசந்த ராணி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Tabebuia
இனம்:
இருசொற் பெயரீடு
Tabebuia rosea
DC.
வேறு பெயர்கள் [1]
பட்டியல்
  • Bignonia fluviatilis G.Mey. nom. illeg.
  • Couralia rosea (Bertol.) Donn.Sm.
  • Sparattosperma roseum (Bertol.) Miers
  • Tabebuia mexicana (Mart. ex DC.) Hemsl.
  • Tabebuia punctatissima (Kraenzl.) Standl.
  • Tecoma mexicana Mart. ex DC.
  • Tecoma punctatissima Kraenzl.
  • Tecoma rosea Bertol.

வசந்த ராணி[2] ( Tabebuia rosea, also called pink poui, and rosy trumpet tree[3]) என்பது 30 m (98 அடி) உயரம் வரை வளரும், 100 cm (3 அடி) வரை விட்டம் அடையக்கூடிய அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய மரமாகும். "சவன்னா ஓக்" என்று பொருள்படும் எசுபானிய பெயரான ரோபிள் டி சபானா, என்ற பெயர் கோஸ்ட்டா ரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது பெரும்பாலும் காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளது. மேலும் இந்த மரம் ஓக் மரங்களை ஒத்திருப்பதால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம்.[4] இது எல் சால்வடாரின் தேசிய மரமாகும், அங்கு இது "மக்விலிஷுவாட்" என்று அழைக்கப்படுகிறது. அழகுக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்ட ஒரு அயல் மரம் இது ஆகும்.[2]

பெயர்கள்

இந்த மரம் மலேசியாயாவில் "டெகோமா" என்று அழைக்கப்படுகிறது.[5]

வசந்த ராணி மரமானது இலங்கையில் "රොබරෝසියා (Robarōsiyā)" என்று அழைக்கப்படுகிறது.[6]

இந்த மரம் தாய்லாந்தில் "ชมพูพันธุ์ทิพย์" என்று அழைக்கப்படுகிறது.[7]

பரவலும் வாழ்விடமும்

இந்த இனம் தெற்கு மெக்சிக்கோவிலிருந்து வெனிசுவேலா, எக்குவடோர் வரை பரவியுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1,200 m (3,937 அடி) வரை, சராசரியாக 20 °C முதல் 30 °C வரை வெப்பநிலையிலும், ஆண்டுக்கு 500 மிமீ மேல் மழைப்பொழிவு இருக்கும் பகுதிகளிலும், மற்றும் மிகவும் மாறுபட்ட பி.எச் உள்ள மண்ணில் வளர்வது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மரம் பெரும்பாலும் அமெரிக்க வெப்பமண்டல நகரங்களில் காணப்படுகிறது, அங்கு இது பெரும்பாலும் பூங்காக்களிலும், தோட்டங்களிலும் நடப்படுகிறது. மழைக்காலத்தில் இது அடர்ந்து இருக்கும்.[சொந்தக் கருத்து?] மேலும், வறண்ட காலங்களில், இலைகள் உதிர்ந்து மரங்களில் ஏராளமான பூக்களுடன் காணப்படும்.

விளக்கம்

இந்த மரம் குறுகிய நீளம் கொண்டது, ஒழுங்கற்ற, அடுக்கு கிளைகளைக் கொண்டது. இது சில தடிமனான கிளைகளை மட்டுமே கொண்டிருக்கும். பட்டை சாம்பல் நிறத்தில் இருந்து பழுப்பு நிறம்வரை, வெவ்வேறு நிற அடர்த்தியில் இருக்கலாம். பட்டைகள் ஆங்காங்கே செங்குத்தாக பிளவுபட்டதாக இருக்கும். இலைகள் பல இலைகள் கொண்ட கொத்துகளாக, இலையுதிர்வதாக இருக்கும். ஒவ்வொரு கொத்திலும் ஐந்து வெவ்வேறு அளவிலான இலைகள் உள்ளன, நடுவில் உள்ள இலை மிகப்பெரியதாக இருக்கும். பூக்கள் முதனைமையக சனவரி, பிப்ரவரி மாதங்களில் பூக்கும். இதன் பூக்கள் பொதுவாக வறண்ட காலத்துடன் தொடர்புடையது; இருப்பினும் ஆகத்து, செப்டம்பர், ஏப்ரல், மே மாதங்களிலும் பூக்கள் காணப்படுகின்றன. பூக்கள் பெரியவையாக, இளஞ்சிவப்பு முதல் ஊதா வரை பல்வேறு நிறங்களில் இருக்கும். மரத்தில் இலைகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும்போது பூக்கள் பூக்கும். இதில் உள்ள பூக்களில் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் ஏற்படுகிறது, என்றாலும் டானேஜர்கள், ஓசனிச்சிட்டு, ஓரியோல்கள் போன்ற பல பறவைகளினாலும் மகரந்த சேர்க்கை நடக்கிறது. நீண்ட, மெல்லிய காய்கள் 35 cm (14 அங்) நீளம் கொண்டவையாக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தோன்றும். காய்கள் மரத்திலேயே உலர்ந்து வெடித்து, அதிலிருந்து நுண் சிறகுகள் கொண்ட விதைகள் வெளியாகின்றன. ஒரு கிலோ கிராமில் சராசரியாக 45,000 விதைகள் உள்ளன, அவற்றில் 13% வரை நீர்ச்சத்து கொண்டவை. விதைகள் முளைப்புத் திறன் மிக்கவை. கிட்டத்தட்ட 100% விதைகளும் முளைக்கக்கூடியவை. இது மிகவும் வேகமாக வளரும் மரமாகும்.  .

மருத்துவப் பயன்கள்

குடல் பூச்சிகள், மலேரியா, கருப்பை புற்றுநோய் ஆகியவற்றுக்கு இந்த மரத்தின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. இரத்த சோகை, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு இதன் பட்டையில் செய்யப்படும் கசாயம் பரிந்துரைக்கப்படுகிறது. இம்மரத்தின் பூக்கள், இலைகள், வேர்களைக் கொண்டு செய்யப்படும் கசாயமானது காய்ச்சல், வலி நிவாரணி, வியர்வையை வரவைக்கவும், டான்சில் வீக்கம் போன்ற பல்வேறு கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "The Plant List: A Working List of All Plant Species". Retrieved June 3, 2014.
  2. 2.0 2.1 "மறந்துவரும் பச்சை வாசனை". Hindu Tamil Thisai. 2025-04-19. Retrieved 2025-04-25. {{cite web}}: Text "ஆயிரம் மலர்களே மலருங்கள் 1" ignored (help)
  3. Hernan Rodriguez Navas. 2007. La Utilidad de las Plantas Medicinales en Costa Rica. EUNA, Heredia, Costa Rica. 213pp.
  4. "Kuala Lumpur becomes an enchanting 'Sakura' paradise". Free Malaysia Today. 25 March 2021. Retrieved 27 March 2021.
  5. "රෝස පැහැ වසන්තය රොබරෝසියා - perabeats Life Articles". perabeats (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-06-18. Retrieved 2022-09-23.
  6. "ชมพูพันธุ์ทิพย์ ต้นชมพูพันธุ์ทิพย์ ชมพูอินเดีย ไม้ต้นขนาดกลางถึงใหญ่". baanlaesuan (in தாய்). 2023-02-27. Retrieved 2023-05-15.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வசந்த_ராணி&oldid=489908" இலிருந்து மீள்விக்கப்பட்டது