வசந்தா வைத்தியநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வசந்தா வைத்தியநாதன்
முழுப்பெயர் வசந்தா
வைத்தியநாதன்
பிறப்பு 1937
மயிலாடுதுறை,
தமிழ்நாடு,
இந்தியா
மறைவு 14-03-2018
கொழும்பு,
இலங்கை
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
பணி சைவவித்தகர்,
வானொலி
வர்ணனையாளர்


வசந்தா வைத்தியநாதன் (1937 - மார்ச் 14, 2018) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சைவவித்தகர். இவர் வானொலியூடாகவும் பிரசங்கங்கள் செய்தவர். ஆலயத் திருவிழாக்களின் நேரடி வானொலி வர்ணனைகளிலும் பங்குபற்றியவர். ஈழத்துச் சிவாலயங்கள் நூலில் நூலாசிரியராகப் பணியாற்றியவர்.

வசந்தா வைத்தியநாதன் தமிழ்நாடு, மயிலாடுதுறையில் பிறந்தவர். யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த எஸ். வைத்தியநாதசர்மா என்பவரைத் திருமணம் புரிந்தார்.

மறைவு

வசந்தா வைத்தியநாதன் 2018 மார்ச் 14 அன்று காலையில் தனது 80வது அகவையில் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

"https://tamilar.wiki/index.php?title=வசந்தா_வைத்தியநாதன்&oldid=2838" இருந்து மீள்விக்கப்பட்டது