ழகரம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ழகரம்
இயக்கம்க்ரிஷ்
தயாரிப்புபால் டிப்போ’ கதிரேசன்
கதைகவா கம்ஸ்,
க்ரிஷ் (திரைக்கதை)
இசைதரண் குமார்
நடிப்பு
  • நந்தா
  • ஈடன் கொரியகோஸ்
  • விஷ்ணுபரத்
  • சந்திரமோகன்
  • கோதண்டன்
  • மீனேஷ் கிருஷ்ணா
வெளியீடு12 ஏப்ரல் 2019 (2019-04-12)
நாடு இந்தியா
மொழிதமிழ்

ழகரம் (zhagaram) என்பது 2019 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படமாகும். இப்படமானது கவா கம்ஸ் எழுதின ப்ராஜக்ட் ஃ என்ற புதினத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தை திரைக்கதை அமைத்து அறிமுக இயக்குநரான க்ரிஷ் இயக்கியுள்ளார். படத்திற்கான இசையை தரண் குமார் அமைக்க, படத்தை ‘பால் டிப்போ’ கதிரேசன் தயாரித்துள்ளார்.[1]

தயாரிப்பு

படத்தின் முதன்மைக் காட்சிகளானது விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரியிலும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் புதையலை எடுக்கச் செல்லும் குழுவானது ஒரு பழமையான சுரங்கம் வழியே செல்வதாக வரும் காட்சிக்கு, பல்லவ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட திருவிடந்தையில் உள்ள சுரங்கத்தைப் போன்ற ஒரு செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் சுவரொட்டியை இயக்குநர் விஜய் மில்டன் வெளியாட்டார்.[2]

கதைச்சுருக்கம்

படத்தின் கதைக்களமானது புதையலைத் தேடுவதாக உள்ளது. சிறுசிறு குறிப்புகளைக் கொண்டு புதையலைத் தேடிப் போகிறது ஒரு குழு அவர்கள் புதயலை கண்டடைகிறார்களா இல்லையா என்பதே கதை.

நடிகர்கள்

  • அகிலாக நந்தா
  • சினேகவாக ஈடன் கொரியகோஸ்
  • சூரியாவாக விஷ்ணுபரத்
  • சந்திரமோகன்
  • கோதண்டன்
  • மீனேஷ் கிருஷ்ணா

இசை

இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். படத்தில் ஒரு பாடல் உள்ளது அதை கபிலன் எழுத ஹரிசரண், சுவேதா மேனனும் பாடியுள்ளனர்.

மேற்கோள்கள்

  1. என்.சுவாமிநாதன் (22 சூன் 2018). "இயக்குநரின் குரல்: புதையலோடு தமிழையும் தேடும் படை! - 'ழகரம்' க்ரிஷ்". செவ்வி. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2018.
  2. "பல கஷ்டங்களை கடந்து ழகரம் படத்தை இயக்கிய இளம் இயக்குநர் க்ரிஷ்". செய்தி. tamil.asianetnews.com. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2018.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ழகரம்_(திரைப்படம்)&oldid=37920" இருந்து மீள்விக்கப்பட்டது