லுகேமியா
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இரத்தப் புற்றுநோய் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
| லுகேமியா | |
|---|---|
| ஒத்தசொற்கள் | Leukaemia |
| படிமம்:Acute leukemia-ALL.jpg | |
| A Wright's stained bone marrow aspirate Cytopathology|smear from a person with B-cell acute lymphoblastic leukemia. | |
| பலுக்கல் | |
| சிறப்பு | Hematology and oncology |
| அறிகுறிகள் | Bleeding, bruising, Fatigue|feeling tired, fever, increased risk of infections[2] |
| வழமையான தொடக்கம் | All ages,[3] most common in 60s and 70s[4] |
| காரணங்கள் | Heredity|Inherited and environmental factors[5] |
| சூழிடர் காரணிகள் | Smoking, family history, ionizing radiation, some chemicals, prior chemotherapy, Down syndrome.[3][5] |
| நோயறிதல் | Blood tests, bone marrow biopsy[2] |
| சிகிச்சை | Chemotherapy, radiation therapy, targeted therapy, bone marrow transplant, supportive care[3] |
| முன்கணிப்பு | Five-year survival rate 57% (USA)[4] |
| நிகழும் வீதம் | 2.3 million (2015)[6] |
| இறப்புகள் | 353,500 (2015)[7] |
முக்கிய அறிகுறிகள்:
ஆங்கிலத்தில் இருவிதமான உச்சரிப்புகளைப் பெற்றுள்ள லுகேமியா (Leukemia/Leukaemia) என்பது குருதியியல் புற்றுநோய் வகைகளில் ஒரு குழுவாகும். இது பொதுவாக எலும்பு மஜ்ஜையில் தொடங்கி அதிக எண்ணிக்கையிலான அசாதாரண இரத்த அணுக்களை விளைவிக்கிறது.[8] இந்த இரத்த அணுக்கள் முழுமையாக வளர்ச்சியடைவதில்லை, அவை வெடிப்புகள் அல்லது லுகேமியா செல்கள் என்று அழைக்கப்படுகின்றன.[2] இரத்தப்போக்கு மற்றும் காயம், சோர்வு, காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றுகளின் ஆபத்து ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும்.[2] சாதாரண இரத்த அணுக்களின் பற்றாக்குறையால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன.[2] நோயறிதல் பொதுவாக இரத்த பரிசோதனைகள் அல்லது எலும்பு மஜ்ஜை பயாப்ஸி மூலம் செய்யப்படுகிறது.[2]
வகைகள் மற்றும் காரணங்கள்:
லுகேமியா ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை.[5] மரபணு காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் (மரபுவழி அல்லாத காரணிகள்) ஆகியவற்றின் கலவையானது ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.[5] ஆபத்து காரணிகளில் புகைபிடித்தல், அயனியாக்கும் கதிர்வீச்சு, சில இரசாயனங்கள் (பென்சீன்) முன் கீமோதெரபி மற்றும் டவுன் சிண்ட்ரோம் போன்றவை அடங்கும்.[5][3] லுகேமியாவின் குடும்ப வரலாறு உள்ளவர்கள் அதிக ஆபத்திற்கு உட்படுகின்றனர்.[3] லுகேமியாவில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (ALL) கடுமையான மைலாய்டு லுகேமியா மற்றும் நாள்பட்ட மைலாய்டு லுக்கீமியா (CML) மற்றும் நாள்பட்ட லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (CLL) இவைகளோடு குறைவாகக் காணப்படும் பல பொதுவகைகளும் உள்ளன.[3][9] இரத்தப் புற்று நோய்கள் மற்றும் நிணநீர் முடிச்சுப் புற்றுநோய்கள் இரண்டும் இரத்த, எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் அமைப்பை பாதிக்கும் ஒரு பரந்த கட்டிகளின் குழுவைச் சேர்ந்தவை, அவை ஹீமாடோபோயிடிக் மற்றும் நிணநீர் திசுக்களின் கட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன.[10][11]
சிகிச்சை முறைகள்:
சிகிச்சையில் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, இலக்கு சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றின் சில கலவைகள் அடங்கும், இவற்றோடு கூட ஆதரவு பராமரிப்பு மற்றும் தேவைக்கேற்ப நோய்த்தடுப்பு பராமரிப்பு ஆகியவைகளும் செய்யப்படும்.[3] சில வகையான லுகேமியாக்களுக்கு கண்காணித்துக் காத்திருத்தலைக் கையாளலாம்.[3] சிகிச்சையின் வெற்றி என்பது லுகேமியாவின் வகை மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வயதைப் பொறுத்தது. வளர்ந்த நாடுகளில் பலன்கள் மேம்பட்டுள்ளன.[9] அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகள் உயிர்வாழும் விகிதம் 57% ஆகும்.[4] லுகேமியாவின் வகையைப் பொறுத்து, 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளில், ஐந்து ஆண்டுகள் உயிர்வாழும் விகிதம் 60% முதல் 90% வரை அதிகமாக உள்ளது.[12] புற்றுநோயிலிருந்து விடுபட்ட தீவிர லுகேமியா நோயுள்ள குழந்தைகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பில்லை.[12]
2015 ஆம் ஆண்டில், உலகளவில் 23 லட்சம் மக்கள் லுகேமியாவால் பாதிக்கப்பட்டனர், இதனால் 3,53,500 பேர் இறந்தனர்.[6][7] 2012 ஆம் ஆண்டில் புதிதாக 3,52,000 மக்களிடம் இது உருவாகியது.[9] இது குழந்தைகளிடையேயுள்ள மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும், குழந்தைகளில் முக்கால் பங்கு லுகேமியா நோயாளிகள் கடுமையான லிம்போபிளாஸ்டிக் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[3] இருப்பினும், அனைத்து லுகேமியாவிலும் 90% க்கும் அதிகமானவை பெரியவர்களிடையே கண்டறியப்படுகின்றன, அவைகளுள் சி. எல். எல் மற்றும் ஏ. எம். எல் பெரும்பாலும் பெரியவர்களிடம் உள்ளன.[3][13] இது அதிகமாக வளர்ந்த நாடுகளில் நிகழ்கிறது.[9]
குறிப்புகள்
- ↑ "Leukemia"..
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "What You Need To Know About™ Leukemia". National Cancer Institute. 23 December 2013. Archived from the original on 6 July 2014. Retrieved 18 June 2014.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 "A Snapshot of Leukemia". NCI. Archived from the original on 4 July 2014. Retrieved 18 June 2014.
- ↑ 4.0 4.1 4.2 "SEER Stat Fact Sheets: Leukemia". National Cancer Institute. 2011. Archived from the original on 16 July 2016.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 Hutter, JJ (Jun 2010). "Childhood leukemia.". Pediatrics in Review 31 (6): 234–41. doi:10.1542/pir.31-6-234. பப்மெட்:20516235.
- ↑ 6.0 6.1 GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282.
- ↑ 7.0 7.1 GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281.
- ↑ "Leukemia". NCI. 1 January 1980. Archived from the original on 27 May 2014. Retrieved 13 June 2014.
Cancer that starts in blood-forming tissue, such as the bone marrow, and causes large numbers of abnormal blood cells
- ↑ 9.0 9.1 9.2 9.3 World Cancer Report 2014. World Health Organization. 2014. pp. Chapter 5.13. ISBN 978-9283204299.
- ↑ Vardiman, JW; Thiele, J; Arber, DA; Brunning, RD; Borowitz, MJ; Porwit, A; Harris, NL; Le Beau, MM et al. (30 July 2009). "The 2008 revision of the World Health Organization (WHO) classification of myeloid neoplasms and acute leukemia: rationale and important changes.". Blood 114 (5): 937–51. doi:10.1182/blood-2009-03-209262. பப்மெட்:19357394. https://semanticscholar.org/paper/0e6fab46796aa350886328a0d034dbc1b517459c. பார்த்த நாள்: 3 August 2020.
- ↑ Cătoi, Alecsandru Ioan Baba, Cornel (2007). Comparative oncology. Bucharest: The Publishing House of the Romanian Academy. p. Chapter 17. ISBN 978-973-27-1457-7. Archived from the original on 10 September 2017.
{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 12.0 12.1 American Cancer Society (2 March 2014). "Survival rates for childhood leukemia". Archived from the original on 14 July 2014.
- ↑ "Chronic Lymphocytic Leukemia (CLL) - Hematology and Oncology". MSD Manual Professional Edition (in ஆங்கிலம்). Archived from the original on 29 August 2021. Retrieved 2020-02-01.