லீலா ஓம்செரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லீலா ஓம்செரி
A portrait of Leela Omchery who will be presented with the Sangeet Natak Akademi Award for Traditional & Folk Music - Kerala by the President Dr. A.P.J Abdul Kalam in New Delhi on October 26, 2004.jpg
பிறப்பு1929
திருவட்டார், கன்னியாகுமரி, இந்தியா
பணிபாடகர் ,எழுத்தாளார்
பின்பற்றுவோர்http://leelaomchery.org
வாழ்க்கைத்
துணை
ஓம்செரி என். என். பிள்ளை
விருதுகள்பத்மசிறீ
சங்கீத நாடக அகாதமி விருது
மருநாதன் மலையாளி விருது
சங்கீத குலபதி
சங்கீத கோவிட
கலாச்சார்யா
சங்கீத சர்வ பூமா

லீலா ஓம்செரி (Leela Omsheri) இவர் ஒரு பாரம்பரிய பாடகர், இசைக்கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பாரம்பரிய இசையில் அவரது பங்களிப்புகளுக்கு அவர் அறியப்பட்டவர் மற்றும் இந்திய பாரம்பரிய இசைக்கு அவரது பங்களிப்புக்காக இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.[1]

வாழ்க்கை ஸ்கெட்ச்

லீலா ஓம்செரி 1928 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு மான்கொயிக்கல் தரவுடு என்ற இடத்தில் பிறந்தார். இளைய வயதிலேயே தனது சகோதரர், காமுகரா புருஷோத்தமனுடன் சேர்ந்து கர்னாடக இசைக் குருவான திருவட்டார் ஆறுமுகம் பிள்ளை பாகவதரிடம் இசையைக் கற்றார். இவரது சகோதரர் காமுகரா புருஷோத்தமன் பாரம்பரிய மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகராகவும் இருந்தார்.[2] இசைக்கலைஞர்களின் ஒரு குடும்பத்தில் இருந்து வந்த அவரது தாயாரின் வழிகாட்டுதலின் கீழ் இசை மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கன்னியாகுமாரியில் ஆரம்பக்கல்வி முடிந்த பின், இவர் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் கர்நாடக இசையில்பட்டம் பெற்றார் , மேலும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இந்துஸ்தானி இசையை படித்து மற்றொரு பட்டம் பெற்றார். மீரட் பல்கலைக் கழகத்திலிருந்து அவர் முதுகலை பட்டம் பெற்றார், அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

பிரபல எழுத்தாளரான ஓமச்சேரி என். என். பிள்ளையை திருமணம் செய்து கொண்டு புது தில்லியில் தங்கியுள்ளார் . இத்தம்பதியருக்கு எஸ். டி. ஓம்சேரி மற்றும் தீப்தி ஒம்சேரி பால்லா என்ற இரண்டு குழந்தைகள் உண்டு, இவர் ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய நடனக்கலைஞர் ஆவார். அவர் சில சிறு கதைகள் எழுதியுள்ளார்.

தொழில்

லீலா ஓமச்சேரி தற்போது கேரளா, திருவனந்தபுரம், காமுகரா இசைப் பள்ளியில் பேராசிரியராகவும் மற்றும் தில்லி திரிகாலா குருகுலத்தின் முதல்வராகவும், மற்றும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.[4]

அவர் தக்ஷிண பாரதி (தென்னிந்திய மகளிர் அமைப்பு) என்ற அமைப்பின் தலைவராகவும் மற்றும் தில்லியில் உள்ள ஸ்வராலயாவின் துணைத் தலைவராகவும் இருந்தார்

(1964 முதல் 1994 வரை அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும், கர்னாடக இசைப் பிரிவில் இசை மற்றும் நுண் கலை ஆசிரியராக பணிபுரிந்தார்.

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லீலா_ஓம்செரி&oldid=10309" இருந்து மீள்விக்கப்பட்டது