லியூசின்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
லியூசின்
| |||
| வேறு பெயர்கள்
2-அமினோ-4- மீதைல் பென்டநோயிக் அமிலம்
| |||
| இனங்காட்டிகள் | |||
| 61-90-5 | |||
| ChEMBL | ChEMBL291962 | ||
| ChemSpider | 5880 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| KEGG | ChEMBL{{{ChEMBL}}} | ||
| பப்கெம் | 6106 | ||
| |||
| UNII | GMW67QNF9C | ||
| பண்புகள் | |||
| C6H13NO2 | |||
| வாய்ப்பாட்டு எடை | 131.18 g·mol−1 | ||
| காடித்தன்மை எண் (pKa) | 2.36 (கார்பாக்சில்), 9.60 (அமினோ)[1] | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
லியூசின் (Leucine) [குறுக்கம்: Leu (அ) L][2] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2CH(CH3)2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: UUA, UUG, CUU, CUC, CUA மற்றும் CUG. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், லியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.
உயிரியல் பண்புகள்
லியூசின் கல்லீரல், கொழுப்புத் திசு மற்றும் தசைநார்த் திசுக்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பு மற்றும் தசைநார்த் திசுக்களில் லியூசின் ஸ்ட்டீரால்களை உருவாக்கப் பயன்படுகிறது. மேலும், இவ்விரண்டு திசுக்களிலும் கல்லீரலைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாக லியூசின் உபயோகப்படுத்தப்படுகின்றது.[3]
தசைத்திசுக்களில் புரத உற்பத்தியைத் தூண்டும் ஒரே ஒரு அமினோ அமிலம் லியூசின் மட்டுமே.[4] உப உணவுப் பொருளாக லியூசின் தசைப் புரத உற்பத்தியைத் தூண்டி முதுமையடைந்த எலிகளில் தசைநார்த் திசு சிதைவினைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[5]

உணவு அம்சங்கள்
L-லியூசின் (E641) உணவுச் சேர்ப்பில் மணங்கூட்டியாக வகைப்படுத்தப்படுகிறது.
| உணவு | கி/100கி |
|---|---|
| சோயா அடர்புரதம் | 4.917 |
| வேர்க்கடலை | 1.672 |
| முளைவிட்ட கோதுமை | 1.571 |
| பாதாம் பருப்பு | 1.488 |
| புல்லரிசி (காடைக்கண்ணி) | 1.284 |
| சமைத்த அவரை | 0.765 |
| சமைத்த பருப்பு வகைகள் | 0.654 |
| சமைத்த கொண்டைக் கடலை | 0.631 |
| மக்காச்சோளம் | 0.348 |
| சாதம் | 0.191 |
மேற்கோள்கள்
- ↑ Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. Retrieved 2007-05-17.
- ↑ J. Rosenthal, et al. Department of Medicine, University of Toronto, Toronto, Canada. "Metabolic fate of leucine: A significant sterol precursor in adipose tissue and muscle". American Journal of Physiology Vol. 226, No. 2, p. 411-418. Retrieved 2008-03-25.
{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Etzel MR (2004). "Manufacture and use of dairy protein fractions". The Journal of Nutrition 134 (4): 996S–1002S. பப்மெட்:15051860. http://jn.nutrition.org/content/134/4/996S.long.
- ↑ L. Combaret, et al. Human Nutrition Research Centre of Clermont-Ferrand. "A leucine-supplemented diet restores the defective postprandial inhibition of proteasome-dependent proteolysis in aged rat skeletal muscle". Journal of Physiology Volume 569, issue 2, p. 489-499. Retrieved 2008-03-25.
- ↑ National Nutrient Database for Standard Reference. U.S. Department of Agriculture. Archived from the original on 2015-03-03. Retrieved 2009-09-16.