லிப்டன் தேயிலை நிறுவனம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

லிப்டன் தேயிலை நிறுவனம் (Lipton Institute of Tea) என்பது யூனிலீவர் நுகர்பொருள் நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலை ஆய்வு நிறுவனம் ஆகும். இங்கிலாந்தில் லிப்டன் ஒரு பேரங்காடி சங்கிலியாகும். இந்நிறுவனம் தேயிலையினால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த நற்பலன்கள் தொடர்பான ஆய்வுகளை நேரடியாக மேற்கொண்டது. மேலும், இந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள கல்விசார் மற்றும் ஆய்வு நிறுவனங்களால் தேயிலை தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு நிதி உதவி அளித்தும் ஒருங்கிணைப்பு செய்தும் வருகிறது.

பின்னணி

உலகின் மிக மூத்த தாய்த்தேயிலைத் தோட்டமான லிப்டன் தேயிலை நிறுவனத்தின் பசுமைக்குடில்

லிப்டன் தேயிலை நிறுவனத்தின் தலைமையகமானது ஐக்கிய இராச்சியத்தின் பெட்போர்டுசையரில் உள்ள சார்ன்புரோக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. ஒரு முறையான தேயிலை ஆய்வுக்கான அடித்தளமானது யூனிலீவர் நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனமாது இந்தியா மற்றும் கெரிச்சோ, கென்யா போன்ற முதன்மையான தேயிலை வளர்ப்பு நடைபெறக்கூடிய நாடுகளிலும் தேயிலைக்குச் சந்தையாக அமைந்துள்ள பிரான்சு, யப்பான், சீனா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஆய்வு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனமானது “புதரிலிருந்து கோப்பைக்கு வரும் தேயிலையைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவது” என்பதை தனது தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டுள்ளதாக பிரகடனம் செய்கிறது.[1] The Institute also participates in and organises scientific conferences.[2][3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=லிப்டன்_தேயிலை_நிறுவனம்&oldid=29009" இருந்து மீள்விக்கப்பட்டது