லிடியன் நாதஸ்வரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

லிடியன் நாதஸ்வரம் (Lydian Nadhaswaram) ஒரு இளவயது பியானோ இசைக்கலைஞர் ஆவார். இவரது மேதைத்தன்மையின் காரணமாக சிறுமுது அறிஞராகவும் கருதப்படுகிறார்.[1][2] இவர் தமிழ் இசையமைப்பாளர் வர்சா சதீஷ் என்பவரின் மகன் ஆவார்.

இசையின் மீது ஆர்வம்

லிடியன் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவரது தந்தையார் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். லிடியன் தனது 2 வயதிலேயே இசைக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.[3]

இசை வாழ்க்கை

2014 ஆம் ஆண்டிலிருந்தே லிடியன் இசையில் ஒரு சவாலான கலைஞனாக மாறினார். பியானோவில் வேகமாகவும், மேற்கத்திய மரபு வழி இசைக்கோர்ப்புகளையும் வாசிக்க வல்லவனாக இருந்தார்.

விருதுகள்

நிகழ்த்து கலைகளுக்கான தேசிய மையத்தின் டாடா அரங்கம்

2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 10 ஆம் நாள், மும்பையின் நிகழ்த்து கலைகளுக்கான தேசிய மையத்தின் டாடா அரங்கத்தில் முதன் முதலாக நிகழ்த்தப்பட்ட தேசிய பியானோ நாளன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டான். அன்று அவன் ஜாஸ் இசைமரபில் என்றும் பசுமையான "ஆட்டம்ன் லீவ்ஸ்" என்ற இசைக்கோர்வையை பியானோவில் வாசித்தான். அரங்கத்தில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்ந்து எழுந்து நின்று கைதட்டல் எழுப்பி தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினர்.

திறமையாளர் விருது

சிபிஎஸ் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட திறமையாளர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு வேர்ல்டுஸ் பெஸ்ட் என்ற விருதினை வென்றார்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லிடியன்_நாதஸ்வரம்&oldid=27668" இருந்து மீள்விக்கப்பட்டது