லா சப்பல் நகர துணைப்பிரிவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லா சப்பல் நகர துணைப்பிரிவு (Quartier de La Chapelle) பாரிஸ்சில் தமிழர்களின் வணிக நிறுவங்கள் குவிந்து காணப்படும் இடமாகும். மேற்குலக நாடுகள் வேறு எங்கும் காணக் கிடைக்காதவாறு தொகையான தமிழர் சிறு வணிகங்கள் இங்கு அடுக்கடுக்காக இருக்கின்றன. 10 தொகுதிகளுக்கு மேலாக இவ்வாறு கடைகள் அடுக்கடுக்காக இருக்கின்றன. இதனால் இதை குட்டித் தமிழீழம் என்றும் சிலர் அழைப்பதுண்டு. இந்த வணிகங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்குள் இங்கு புகலிடம் வந்த ஈழத்தமிழர்களாலும், பிரேஞ்சு கொலனியாக இருந்த பாண்டிச்சேரியில் இருந்து வந்த தமிழர்களாலும் நடாத்தப்படுகின்றன.
லா சப்பல் வீதிகளில் தமிழர்கள், குறிப்பாக தமிழ் இளையோர் அங்காங்கே கூடிக் கதைப்பதை பாக்கலாம்.
அனேக வணிகக் கடைகளில் புலிகள் சுவரொட்டிகள் காணப்படுகின்றன.