லாஸ்லியா மரியனேசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லொஸ்லியா மரியநேசன்
பிறப்பு23 மார்ச்சு 1996 (1996-03-23) (அகவை 28)
கிளிநொச்சி, இலங்கை
தேசியம்இலங்கை தமிழர்
பணிசெய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சிக் கலைஞர், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015 - இன்று வரை
சொந்த ஊர்திருகோணமலை

லொஸ்லியா மரியநேசன் (பிறப்பு: 23 மார்ச்சு 1996) என்பவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபற்றினார்.[1][2][3] இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது.

ஆரம்ப வாழ்க்கை

லாஸ்லியா இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் திருக்கோணமலைக்கு இடம்பெயர்ந்தனர். இவர் தன் கல்வியை திருக்கோணமலையில்  தொடர்ந்தார். இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்பில் வசித்து வந்தார்.

தொழில் வாழ்க்கை

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.[4]

2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப்[5] என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படம் 2021 செப்டம்பர் 17 இல் திரையரங்குகளில் வெளியானது. இவர் 'ப்ளேஸ்ஸோ' என்ற சோப்பு விளம்பரங்களில் நடித்துள்ளார்.[6][7]

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் அலைவரிசை குறிப்புகள்
2015 - 2018 குட் மோர்னிங் ஸ்ரீ லங்கா தொகுப்பாளர் சக்தி தொலைக்காட்சி
2016 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஒரு அத்தியாயம் மட்டும்
2018 - 2019 நியூஸ் பேஸ்ட் செய்தி வாசிப்பாளர்
2019 பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் விஜய் தொலைக்காட்சி
2020 ஸ்டார்ட் மியூசிக் 2 விருந்தினராக ஒரு அத்தியாயம் மட்டும்

திரைப்படம்

ஆண்டு படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2021 பிரண்ட்ஷிப் அனிதா

மேற்கோள்கள்

  1. லாஸ்லியா - பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இலங்கை பெண்
  2. Admin (2019-06-24). "Losliya Bigg Boss, Biography, Wiki, DOB, Family, Profile, Movies list" (in English).
  3. "Losliya Mariyanesan (@losliyamariya96) • Instagram photos and videos" (in English).
  4. admin (2019-06-23). "Losliya (Bigg Boss) Wiki, Biography, Age, Family, Native, Images" (in English). Archived from the original on 2019-06-26. பார்க்கப்பட்ட நாள் 2019-07-01.
  5. "Cricketer Harbhajan Singh to Make Acting Debut with Tamil Film Friendship, See Poster". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.
  6. "விளம்பரங்களிலும் கல்லா கட்டும் லாஸ்லியா". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  7. "முதல் முறையாக விளம்பரத்தில் நடித்த லாஸ்லியா". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=லாஸ்லியா_மரியனேசன்&oldid=10188" இருந்து மீள்விக்கப்பட்டது