லதா தாக்கூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லதா தாக்கூர்
Lata Thakur
இலாகௌல் மற்றும் சுபீதி சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
(1972-76)
தொகுதிஇலாகௌல் மற்றும் சுபீதி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-08-21)21 ஆகத்து 1941
கெமூர், இலாகௌல், குல்லு துணைக் கோட்டம், கங்கரா மாவட்டம், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு14 December 1976(1976-12-14) (aged 35)
பாந்தோ, மண்டி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபடிமம்:Indian National Congress hand logo.svg இந்திய தேசிய காங்கிரசு
பணிஅரசியல்வாதி

லதா தாக்கூர் (Lata Thakur) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1941 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1972 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் இலாகௌல் மற்றும் சுபீதி சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அரசியலில் இயங்கினார். லதா தாக்கூர் இலாகௌல் மற்றும் சுபீதி சட்டமன்றத் தொகுதியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகவும், இமாச்சலப் பிரதேசம் முழுவதிலும் முதல் பெண் பழங்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் அறியப்படுகிறார்.[1][2]

அரசியல் வாழ்க்கை

லதா தாக்கூர் ஒரு பட்டியல் பழங்குடி வேட்பாளராக இருந்தார் மற்றும் 1972 ஆம் ஆண்டு இலாகௌல் மற்றும் சுபீதி சட்டமன்றத் தொகுதியில் லோக் ராச்சு கட்சி வேட்பாளர் தாக்கூர் தேவி சிங் என்பவருக்கு எதிராக வெற்றி பெற்றார்.[1][3]

லதா தாகூரின் வேண்டுகோளின் பேரில், பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இலாகௌல் மற்றும் சுபீதி பள்ளத்தாக்குகளுக்கு வருகை தந்தார்.[4][5][6][7] 1974 ஆம் ஆண்டு சூன் மாதம் காந்தி மீண்டும் சுபீதிக்கு வருகை தந்தார். ஆனால் இந்த முறை இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகிலுள்ள சும்டோவிற்கு மட்டுமே சென்றார். இருப்பினும் இந்த வருகை அங்கு காங்கிரசு கட்சி மற்றும் லதா தாக்கூர் ஆகியோரின் நிலையை மேலும் வலுப்படுத்தியது.[8] லதா தாக்கூர், தொலைதூர சுபீதி பள்ளத்தாக்கின் அனைத்து உள்ளூர் மக்களுக்கும் குளிர்காலத்திற்கு மானிய விலையில் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் இல்லாமல் எரிபொருள் விறகு வழங்குவதற்கான ஏற்பாட்டை கொண்டு வந்தார்.[6]

அதோடு, இமாச்சலப் பிரதேச இளைஞர் காங்கிரசு கமிட்டியின் தலைவராகவும் லதா தாக்கூர் பணியாற்றினார்.[9] இளைஞர் காங்கிரசு ஒருங்கிணைப்பாளராக, வளர்ச்சித் திட்டங்களின் வரைபடத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று வாதிட்டார்.[10] மணாலியில் உள்ள இமயமலை புத்த சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[11] லதா தாக்கூர் மற்றும் வித்யா சுடோக்சு ஆகியோர் யசுவந்த் சிங் பர்மரின் பாலியாண்ட்ரி இன் தி இமாலயாசு என்ற புத்தகத்தை விமர்சித்தனர், இந்த புத்தகம் மாநிலத்தின் பெண்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்றும், பர்மர் இமாச்சல் பெண்களை நன்கு புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.[12]

படிமம்:Gemur Lahaul Oct20 D72 17824.jpg
லதா தாக்கூரின் சொந்த கிராமமான இயெமூர், அக்டோபர் 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் காணப்பட்டது.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்ட நேரத்தில், லாகால் பள்ளத்தாக்குக்கு ஆண்டு முழுவதும் சாலை இணைப்பை வழங்குவதற்காக ரோத்தங் கணவாய் கீழ் ஒரு சுரங்கப்பாதையை கட்டும் யோசனையைத் தொடங்குவதில் லதா தாக்கூர் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்பட்டது. லதா தாக்கூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பிரதமர் இலாகௌல் மற்றும் சுபீதி மாவட்டத்திற்கு வருகை செய்தபோது இந்திரா காந்தியுடன் இந்த தேவை குறித்து பேசியதாகவும், இந்த விவாதத்தால் தொடங்கப்பட்ட நிகழ்வுகளின் சங்கிலி பல தசாப்தங்களுக்குப் பிறகு அடல் சுரங்கப்பாதை வடிவில் நடைமுறைக்கு வந்ததாகவும் அறியப்படுகிறது.[13][14][15]

தனிப்பட்ட வாழ்க்கை

லதா தாக்கூர் இலாகௌல் மற்றும் சுபீதி மாவட்டத்தின் இலாகௌல் தெக்சில் உள்ள இயெமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[16]

திருமணம்

இவர் கெமூரைச் சேர்ந்த நிகால் சந்து தாக்கூரை மணந்தார்.[17] நிகால் சந்து ஓர் உள்ளூர் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவரது மூதாதையர்கள் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து இலாகௌவில் உள்ள கொலோங்கின் முக்கியத்தவர்களாக இருந்தனர். நிகால் சந்து மகாவீர் சக்கரா விருது பெற்ற படைத்தலைவரான குசால் சந்தின் தம்பி ஆவார். இலாகௌல் வளர்ந்து வரும் மாநிலமான இமாச்சலப் பிரதேசத்துடன் இணைக்கப்படும் வரை 1966 வரை நிகால் சந்து பஞ்சாப் பழங்குடியினர் ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார். நிகால் சந்து இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தொகுதியிலும் போட்டியிட்டார், ஆனால் தோல்வியடைந்தார். இவர் 1975 ஆம் ஆண்டில் இறந்தார் .[18][19]

1962 ஆம் ஆண்டில், லதா தாக்கூர் மற்றும் நிகால் சந்து தாக்கூர் தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு ரவி தாக்கூர் என்று பெயரிட்டனர், மேலும் அவர் வளர்ந்து ஒரு அரசியல்வாதியாகவும் ஆனார்.[9]

மரணம்.

லதா தாக்கூர் 1976 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று தனது 35 வயதில் பாண்டோ (மண்டி மாவட்டத்தில்) அருகே நடந்த கார் விபத்தில் கொல்லப்பட்டார்.[16]

நினைவுச் சின்னம்

இலாகௌல் மற்றும் சுபீதி மாவட்டத்தின் உதய்பூர் கிராமத்தில் உள்ள லதா தாக்கூர் நினைவு அரங்கம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. அங்கு லதா தாக்கூர் நினைவு டி-20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.[20][21]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Jaffrelot, Christophe; Kumar, Sanjay (2012-05-04). Rise of the Plebeians?: The Changing Face of the Indian Legislative Assemblies (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-136-51661-0.
  2. "Rahul Gandhi visits Lahaul-Spiti to woo electorate". India Today (in ஆங்கிலம்). Retrieved 2022-11-03.
  3. Socialist India (in ஆங்கிலம்). Indian National Congress. All India Congress Committee. 1972.
  4. Sharma, Ashwani (2022-02-14). "PM Modi To Relive Old Memories In Himachal's Keylong" (in ஆங்கிலம்). Retrieved 3 November 2022.
  5. India, Granthshala (2022-09-28). "Congress leader Dunichand Thakur no more: Died at the age of 91, Lahaul-Spiti Congress lost priceless Ratan- Ravi Thakur". Granthshala India (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-03.
  6. 6.0 6.1 Bodh, Top Singh. "122 Winter Days Stranded in a snowed-in place". Retrieved 3 November 2022.
  7. Roberto Vitali (2000). A Short Guide To Key Gonpa. p. 58.
  8. Issar, Brigadier Satish K. (2021-06-15). Vision, Courage and Service: Life and Times of General T.N. Raina, MVC (in ஆங்கிலம்). Vision Books. ISBN 978-93-86268-52-5.
  9. 9.0 9.1 "Biodata of Ravi Thakur" (PDF). Retrieved 3 November 2022.
  10. Women on the March (in ஆங்கிலம்). Smt. Mukul Banerjee for the Women's Front of All India Congress Committee. 1976. p. 14.
  11. "Himalayan Buddhist Society Manali". testwebsites.cybraintech.com. Retrieved 2022-11-03.
  12. Elmore, Mark (2016-07-05). Becoming Religious in a Secular Age (in ஆங்கிலம்). Univ of California Press. p. 55. ISBN 978-0-520-29054-9.
  13. Panwar, Tikender Singh (30 September 2020). "Rohtang Tunnel – Remember the Workers who Built it". NewsClick (in ஆங்கிலம்). Retrieved 2022-11-03.
  14. Gupta, Dharam Prakash (2020-10-16). "BJP and Congress leaders vie to draw political mileage from Atal tunnel". Himachal Guardian (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2022-11-03.
  15. Service, Statesman News (2020-10-04). "BJP, Cong spar to stake claim over Atal Tunnel construction". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-03.
  16. 16.0 16.1 "महिला दिवस पर याद आईं लता और इंदिरा". Amar Ujala (in இந்தி). Retrieved 2022-11-03.
  17. Ghosh, Tapash Kumar (2002). A Profile of the Himalayan Lahaula (in ஆங்கிலம்). Anthropological Survey of India, Ministry of Tourism and Culture, Department of Culture, Government of India. p. 216. ISBN 978-81-85579-52-8.
  18. Brentnall, Mark (2004). The Princely and Noble Families of the Former Indian Empire: Himachal Pradesh (in ஆங்கிலம்). Indus Publishing. p. 364. ISBN 978-81-7387-163-4.
  19. Sahni, Ram Nath (1994). Lahaul - The Mystery Land in the Himalayas. New Delhi: Indus Publishing Company. pp. 96–100.
  20. "Lata Thakur Memorial Stadium (Stadium) - Udaipur, Himachal Pradesh". www.helpmecovid.com. Retrieved 2022-11-03.
  21. "कुल्लू| लताठाकुर क्रिकेट मेमोरियल टी-20 क्रिकेट प्रतियोगिता लाहौल-स्पीति के उदयपुर". Dainik Bhaskar (in இந்தி). 2017-06-01. Retrieved 2022-11-03.
"https://tamilar.wiki/w/index.php?title=லதா_தாக்கூர்&oldid=487186" இலிருந்து மீள்விக்கப்பட்டது