ரேஷ்மா நிலோபர் நகா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரேஷ்மா நிலோபர் நகா
ரேஷ்மா நிலோபர் நகா
இயற்பெயர்/
அறியும் பெயர்
ரேஷ்மா நிலோபர் விசாலாக்சி
பிறந்ததிகதி 4 பெப்ரவரி 1989 (1989-02-04) (அகவை 35)
பிறந்தஇடம் சென்னை, தமிழ்நாடு
பணி மாலுமி
கல்வி அமெட் பல்கலைக்கழகம், கானாத்தூர்
கல்வி நிலையம் பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் , ராஞ்சி
அறியப்படுவது இந்தியாவின் முதல் பெண் மாலுமியும் உலகிலுள்ள குறிப்பிடத்தக்க சில பெண் மாலுமிகளில் ஒருவர்

ரேஷ்மா நிலோபர் விசாலாக்சி என்ற இயற்பெயரைக்கொண்ட ரேஷ்மா நிலோபர் நகா, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் கப்பல் வழிநடத்துனர் ஆவார், தற்போது கடலில் இருந்து கொல்கத்தா & ஹால்டியா துறைமுகத்திற்கு ஹூக்ளி நதிமுகத்துவாரம் வழியாக கப்பல்களை வழிநடத்துவதில் ஈடுபட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் நதிநீர் மாலுமியாக தகுதி பெற்ற இவர், இத்தகுதி பெற்ற முதல் இந்தியப்பெண் மற்றும் உலகின் மிகச் சில பெண் கடல் மாலுமிகளில் ஒருவரானார். [1] முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து 2019 ஆம் ஆண்டில் நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.

சென்னையின் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்துள்ள ரேஷ்மா, தனது பள்ளிக் கல்வியை முடித்து, சென்னை கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி அகாடமியில் (AMET) கடல் தொழில்நுட்பத்தில் தொழில்முறை படிப்பை முடித்துள்ளார். பின்னர் பயணிகள் கப்பல்கள் மற்றும் கொள்கலன் கப்பல்கள் இரண்டிலும் உலகம் முழுவதும் பயணம் செய்து பயிற்சி பெற்றுள்ளார். இறுதியாக, அவர் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையில் (KoPT) இல் கிட்டத்தட்ட ஆறரை ஆண்டுகள், மாலுமி பணிக்கு தேவையான அறிவு, திறமை மற்றும் தீவிர எச்சரிக்கை, பொறுமை மற்றும் மனஉறுதி ஆகியவைகளுக்கு பயிற்சி பெற்று 2018 ஆம் ஆண்டில் ஹூக்ளி ஆற்று முகத்துவாரம் வழியாக கொல்கத்தா துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை செலுத்தும் முழுநேர மாலுமியாக நியமிக்கப்பட்டார். [2] . ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மரைன் டெக்னாலஜியில் பொறியாளர் பட்டமும் பெற்றுள்ளார். [3]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரேஷ்மா_நிலோபர்_நகா&oldid=27665" இருந்து மீள்விக்கப்பட்டது