ரேவதி எஸ். வர்மா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரேவதி எஸ். வர்மா
Revathy S Varmha.jpg
பிறப்புபுது தில்லி, இந்தியா
பணி
  • Film director
  • screenwriter
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போது வரை

ரேவதி எஸ் வர்மா ( Revathy S. Varmha ) ஓர் இந்திய இயக்குனர் ஆவார் .

ரேவதி 16 வயதில் விளம்பரங்களுக்கு வசனம் எழுதத் தொடங்கினார்.[1] புது தில்லியில் வசிக்கும் இவர், 1990களில் ரெக்சோனா விளம்பரத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மேலும் 2005ஆம் ஆண்டுக்குள் கேட்பரி, பார்க்கர் பேனா, கீதாஞ்சலி குழுமத்தின் நட்சத்ரா நகைக்கடை மற்றும் ஹூண்டாய் சான்ட்ரோ ஆகியவற்றுக்கான விளம்பரங்கள் உட்பட 480க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்.[1] மேலும் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் சுமார் 60 நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

திரைப்பட வாழ்க்கை

2005 இல் வர்மா திரைப்படங்களையும் இயக்கத் தொடங்கினார்.[1] 2006 இல் வெளியான ஜூன் ஆர் என்ற தமிழ் குடும்பத் திரைப்படம் இவரது அறிமுகமாகும்.[2] நடிகை ஜோதிகாவின் 25ஆவது படமான இதில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் குஷ்பு சுந்தர், சரிதா மற்றும் பிஜு மேனன் ஆகியோம் உடன் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் முதலில் ஜூன் 2005 இல் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் 2005 ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டது. இதனால் படம் இன்னும் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டது.[3] திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு குறித்த நடிகை குஷ்புவின் கருத்துகள் இந்திய அரசியல் கட்சிகளை கோபப்படுத்தியதை அடுத்து அவரது படங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டபோது பட வெளியீடும் சிக்கலைச் சந்தித்தது.[4]

ஜூன் ஆர் வெளியான பிறகு, இவர் மேலும் இரண்டு படங்களை இயக்கத் தொடங்கினார். ஜூன் ஆர் படத்தின் பாலிவுட் ஆக்கமான ஆப் கே லியே ஹம் மற்றும் இலங்கைத் திரைப்படமான யசோதா கண்ணா, அதன் அரசியல் நிலைப்பாட்டிற்காக விமர்சிக்கப்பட்டது. ஆப் கே லியே ஹம் படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஜெயா பச்சன், மிதுன் சக்கரவர்த்தி, மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன், ஆயிஷா தாக்கியா மற்றும் ரன்வீர் ஷோரே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[5][6]

மலையாளத் திரைபடத்துறை

2012 இல் ரேவதி வர்மா, மேட் டாட் என்ற தனது முதல் மலையாளப் படத்தை இயக்கினார், இரண்டாவது மலையாளத் திரைப்படம் டிசம்பர் 2012 இல் முன் தயாரிப்பில் இருந்தது.[7] இதில் லால், நஸ்ரியா நசீம், மேகனா ராஜ், லாலு அலெக்ஸ், பத்மப்ரியா மற்றும் பூஜா காந்தி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வந்தனர்.[8][9]

2014 இல் இவர் ஒலிம்பிக்கு விளையாட்டு வீராங்கனை பி. டி. உசாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தி கோல்டன் கேர்ள், பி.டி. உசா [10][11][12] என்பதின் முன் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கினார்.

கொரோனா வைரசு முடியும் தருவாயில் இவர் சமகால மதிப்பைக் கொண்ட ஒரு விஷயத்தை எடுத்துரைக்கும் இ வளையம் என்ற மலையாளத் திரைப்படத்தை தொடங்கினார்.[13]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Anand, Shilpa Nair (2 January 2013). "On a road less travelled". தி இந்து. https://www.thehindu.com/features/cinema/on-a-road-less-travelled/article4265187.ece. பார்த்த நாள்: 18 September 2019. 
  2. "Ladies special!". சிஃபி. 30 June 2005. Archived from the original on 6 August 2015.
  3. "'June R' for Diwali". சிஃபி. 20 November 2015. Archived from the original on 20 November 2015.
  4. "Ban on Kushboo films to be lifted". சிஃபி. 1 July 2016. Archived from the original on 1 July 2016.
  5. Subhash K. Jha. "Vidya Malvade replaces Urvashi Sharma in Aap Ke Liye Hum". Bollywood Hungama. https://www.bollywoodhungama.com/award/filmfare-award/2009-2/. பார்த்த நாள்: 2008-09-16. 
  6. Sudhish, Navamy (31 July 2012). "Director Revathy S Varma, on 'Mad Dad'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304222945/http://www.newindianexpress.com/entertainment/interviews/article579807.ece. 
  7. Sidhardhan, Sanjith (6 December 2012). "Revathy S Varmha gears up for next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Revathy-S-Varmha-gears-up-for-next/articleshow/17502806.cms. 
  8. Kurian, Shiba. "Date clashes delay 'Maad Dad'". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/others/news-interviews/Date-clashes-delay-Maad-Dad/articleshow/12556784.cms. பார்த்த நாள்: 21 May 2012. 
  9. "Maad Dad - tikkview.com| Find what you like". www.tikkview.com. Archived from the original on 2013-01-14.
  10. "Priyanka keen to play P T Usha in biopic I'm making : Revathy". inshorts.com. 4 October 2017.
  11. "Director Revathy S Varmah puts an end to speculations on PT Usha's biopic". timesofindia.indiatimes.com. 29 April 2019.
  12. "I've nurtured this dream for more than a decade, says the director of PT Usha biopic". scroll.in. 5 October 2017.
  13. "E Valayam | 'E circle' with the essential questions of the time; First look poster". malayalam.news18.com. 12 February 2022.
"https://tamilar.wiki/index.php?title=ரேவதி_எஸ்._வர்மா&oldid=21235" இருந்து மீள்விக்கப்பட்டது