ரேகா குப்தா
ரேகா குப்தா | |
|---|---|
| 9ஆவது தில்லி முதலமைச்சர் | |
| பதவியில் 20 பிப்ரவரி 2025[1] | |
| துணைநிலை ஆளுநர் | வினை குமார் சக்சேனா |
| துணை | பர்வேசு சாகிப் சிங் |
| Succeeding | ஆதிசீ |
| சட்டமன்ற உறுப்பினர்-தில்லி சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 8 பிப்ரவரி 2025 | |
| முன்னையவர் | பந்தனா குமாரி |
| தொகுதி | சாலிமார் பாக் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 19 சூலை 1974 ஜூலானா, அரியானா, இந்தியா |
| கல்வி | தில்லி பல்கலைக்கழகம் சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் |
ரேகா குப்தா (Rekha Gupta)(பிறப்பு 19 சூலை 1974) என்பவர் இந்தியாவின் தில்லியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 20 பிப்ரவரி 2025 முதல் தில்லியின் 9வது முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.[1][2][3] இவர் தில்லியின் நான்காவது பெண் முதல்வராக, இப்பதவியை வகிக்கும் ஒட்டுமொத்த 9வது பெண் முதல்வர் என்ற பெருமையினைப் பெறுகிறார். சாலிமார் பாக் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரான இவர், தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், தலைவரும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், கட்சியின் தில்லி மாநிலப் பிரிவின் பொதுச் செயலாளரும் ஆவார்.[4]
கல்வி
ரேகா குப்தா தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல், இளங்கலைச் சட்டம் படிப்புகளை முடித்துள்ளார்.
அரசியல்
1996-1997ஆம் ஆண்டில் இவர் தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரானார். 2007ஆம் ஆண்டில் உத்தரி பிடம்புரா (பகுதி 54) பகுதியிலிருந்து தில்லி மாநகர உறுப்பினரானார். மீண்டும் 2012ஆம் ஆண்டில் உத்தரி பிடம்புராவில் (வார்டு 54) இருந்து இதே பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6][7] 2025 சட்டமன்றத் தேர்தலில் சாலிமார் பாக் சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரியை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ரேகா குப்தா வெற்றி பெற்றார்.[8]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Pandey, Neeraj (2025-02-19). "Rekha Gupta Named Next Delhi CM, Parvesh Verma To Be Deputy. Oath-Taking Tomorrow". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-02-19.
- ↑ PTI (2025-02-19). "Shalimar Bagh MLA Rekha Gupta to be new Delhi CM". www.millenniumpost.in (in ஆங்கிலம்). Retrieved 2025-02-19.
- ↑ "बीजेपी ने कैसे सिलेक्ट किया दिल्ली का CM, 'बायोडाटा' में क्या-क्या देखा?". News18 हिंदी (in இந்தி). 2025-02-19. Retrieved 2025-02-19.
- ↑ "Delhi New CM: कौन है रेखा गुप्ता जो सीएम रेस में है आगे! इस वजह से मानी जा रही है मजबूत दावेदारी". mpcg.ndtv.in (in இந்தி). Retrieved 2025-02-19.
- ↑ "BJP names Rekha Gupta as its Delhi mayor candidate. Who is she?". India Today. 27 December 2022. Retrieved 9 February 2025.
- ↑ "Shalimar Bagh election results 2025 highlights: BJP's Rekha Gupta breaks AAP's winning streak". The Times of India. 8 February 2025. Retrieved 9 February 2025.
- ↑ "Rekha Gupta ::A proud Indian:: ||Political Profile||". www.rekhagupta.in.
- ↑ "Delhi Assembly Elections Results 2025 - Shalimar Bagh" (in en). Election Commission of India. 8 February 2025 இம் மூலத்தில் இருந்து 19 February 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250219124505/https://results.eci.gov.in/ResultAcGenFeb2025/candidateswise-U0514.htm. பார்த்த நாள்: 19 February 2025.