ரெஜினா பேகம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ரெஜினா பேகம் |
---|---|
பிறந்ததிகதி | அக்டோபர் 23 1968 |
பிறந்தஇடம் | தாளந்திருவாசல் தமிழ்நாடு |
அறியப்படுவது | எழுத்தாளர் |
ரெஜினா பேகம் (பிறப்பு: அக்டோபர் 23 1968), தமிழ்நாடு தாளந்திருவாசல் எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை அல்ஜுனிட் தொடக்கப்பள்ளியிலும், பிராட்ரிக் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் தமிழ், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் புலமைவாய்ந்தவர்.
தொழில் நடவடிக்கை
வி. ஐ .பி.டிராவல் அண்ட் டுவர்ஸ் எனும் பயணத்துறை நிறுவனத்தைத் தொடங்கி அதன் நிர்வாக இயக்குநராக பணியாற்றிவருகின்றார்.
இலக்கியப் பணி
1982ல் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை பல சிறுகதைகளையும், நாடகங்களையும், மரபுக் கவிதைகளையும், புதுக் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1994ல் வானொலியில் இவரின் முதல் படைப்பு ‘விகடகவி தெனாலிராமன்' எனும் தலைப்பில் ஒலிபரப்பாகியது. இதுவொரு நாடகமாகும்.
வகித்த பதவிகள்
இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினராகவும், ஈராண்டுகள் அதன் பொருளாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் சிண்டா, பொத்தோங் பாசிர் இந்திய நற்பணிச் செயற்குழு, தமிழ்மொழி பண்பாட்டுக்கழகம் ஆகியவற்றிலும் உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு