ரூபராணி ஜோசப்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கலாபூஷணம்
ரூபராணி ஜோசப்
Rubarani Joseph.jpg
முழுப்பெயர் ரூபராணி
ஜோசப்
பிறப்பு 05-09-1935
மட்டக்களப்பு
இறப்பு 23-04-2009
(அகவை 73)
தேசியம் இலங்கைத் தமிழர்,
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்


ரூபராணி ஜோசப் (செப்டம்பர் 5, 1935 - ஏப்ரல் 23, 2009) மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மலையகப் பெண் எழுத்தாளர். சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிருக்கிறார். கலை இலக்கியப் பணி தவிர இவர் சமூக, கல்வி, தொழிற்சங்கம், அரசியல் துறைகளிலும் இவரின் பங்கு கனதியானவை. மலைநாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இணைந்து மாதர் சங்கத் தலைவியாக செயற்பட்டவர்.

இவர் தனது நூல்களுக்காக தேசிய, மத்திய மாகாண, வட, கிழக்கு மாகாண பரிசுகளும் விருகளும் பெற்றவர். சிறந்த பேச்சாளருக்கான சொல்லின் செல்வி பட்டத்தையும், கலாபூஷணம் என்ற விருதினையும் பெற்றவர். கண்டி நல்லாயன் மகளிர் கல்லூரியில் கால்நூற்றாண்டு காலமாக ஆசிரியராக கடமையாற்றியவர்.

இவரது நூற்கள்

  • ஏணியும் தோணியும் (சிறுவர் இலக்கியம்)
  • இல்லை, இல்லை (நாடகத் தொகுதி)
  • ஒரு வித்தியாசமான விளம்பரம் (சிறுகதைகள்)
  • ஒரு தாயின் மடியில் (குறுநாவல்)
  • அம்மாவின் ஆலோசனைகள் (சிறுவர் இலக்கியம்)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரூபராணி_ஜோசப்&oldid=2794" இருந்து மீள்விக்கப்பட்டது