ரா. பாலகிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரா. பாலகிருஷ்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ரா. பாலகிருஷ்ணன்
பிறந்ததிகதி செப்டம்பர் 16 1933
அறியப்படுவது எழுத்தாளர்

ரா. பாலகிருஷ்ணன் (பிறப்பு: செப்டம்பர் 16 1933) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டம் சங்கரன் குடியிருப்பு எனும் ஊரில் பிறந்தவர். இவர் முதலில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, பின்னர் தமிழ் நாளேடுகளில் உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர், ஆசிரியர் மற்றும் உரிமையாளராகப் பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் தமிழ் மொழிப் பதிப்பாசிரியராகவும், முதன்மை ஒருங்கிணைப்புப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியவர். புதிய அரசியல் சட்டம், மண்டல், காவிரித் தீர்ப்பு என பல்வேற் நூல்களை இயற்றியுள்ளார். இவர் எழுதிய “மக்களவைக் கூட்டத்தைத் தமிழகத்தில் நடத்துக” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=ரா._பாலகிருஷ்ணன்&oldid=5693" இருந்து மீள்விக்கப்பட்டது