ராம ராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராம ராஜா
இயற்பெயர்/
அறியும் பெயர்
ராம ராஜா
பிறந்ததிகதி டிசம்பர் 30 1967
பிறந்தஇடம் சிங்கப்பூர்
அறியப்படுவது எழுத்தாளர்

ராம ராஜா (பிறப்பு: டிசம்பர் 30 1967), சிங்கப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கெப்பல் தொடக்கப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்து பின்பு குயீன்ஸ்டவுடன் உயர்நிலைப் பள்ளியிலும், தொழில்நுட்பப் பள்ளியிலும் கற்றுள்ளார். பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண தர நிலைத் தேர்வில் தேர்ச்சியடைந்த பின்பு Our Lady of Lourdes பள்ளியில் பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வில் சித்திபெற்றார்.

தொழில்நடவடிக்கை

  • சுகாதார அமைச்சில் பணியாற்றி வருகின்றார்.

வகித்த பதவிகள்

இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், அதன் துணைச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

இலக்கியப் பணி

சிவகாமி சுந்தரம் எனும் புனைப்பெயரில் 1992ல் எழுதத் தொடங்கிய இவரின் முதல் சிறுகதை ‘சென்றது வசந்தம்’ எனும் தலைப்பில் தமிழ் முரசில் வெளியானது. இதுவரை பல சிறுகதைகளையும், மர்மத் தொடர்களையும் இவர் எழுதியுள்ளார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்

  • புது உறவு எனும் சிறுகதைக்கான 1ம் பரிசு (1996)
  • மெல்லத் திறந்தது கதவு எனும் சிறுகதைக்கான ஆறுதல் பரிசு (1997)
  • 'ஆ சோ' எனும் கதைக்கான 3வது பரிசு

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://tamilar.wiki/index.php?title=ராம_ராஜா&oldid=6048" இருந்து மீள்விக்கப்பட்டது