ராமகிருஷ்ணன் (செயற்பாட்டாளர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சி. ராமகிருஷ்ணன்
RK MVAward.jpg
2012 பிப்ரவரி 18 இல் மரு. மேரி வர்கீஸ் விருதினைப் பெறுகிறார்.
பிறப்பு6 மே 1954 (1954-05-06) (அகவை 70)
சேலம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்அமர் சேவா ராமகிருஷ்ணன்
அறியப்படுவதுஅமர் சேவா சங்கம்
சொந்த ஊர்ஆய்க்குடி
பெற்றோர்சிவசுப்ரமணியன், சரஸ்வதி
வாழ்க்கைத்
துணை
சித்ரா
விருதுகள்பத்மஸ்ரீ

ராமகிருஷ்ணன் அல்லது அமர் சேவா ராமகிருஷ்ணன் (English: Ramakrishnan) ( பிறப்பு: 6 மே 1954) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சார்ந்த சமூக செயற்பாட்டாளாராவார். தமிழ்நாட்டு ஆய்க்குடியில் அமர் சேவா சங்கம் என்ற அமைப்பின் நிறுவனராவார்..[1] மாற்றுத்திறனாளிக்கான மருத்துவம் மற்றும் மறுவாழ்விற்கான இவரின் பங்களிப்பிற்கு 2020 இல் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.[2]

இளமைக் காலம்

சேலத்தில் 1954 இல் சிவசுப்ரமணியன் சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தஞ்சாவூரில் பள்ளிக்கல்வியைப் பயின்று, ஆய்க்குடிக்குப் பின்னர் வந்தடைந்தார்.[3] 1970களில் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எந்திரப் பொறியியல் பட்டம் பெற்றவர். 1975 ஜனவரி 10 இல் நான்காமாண்டு பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் போது பெங்களூரில் நடந்த கடற்படை அதிகாரி நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார்.[4] அப்போது நடந்த உடல் தகுதிச் சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் கழுத்திற்குக் கீழ்ப் பகுதிகள் செயலிழந்துவிட்டன.

குடும்பம்

1994 இல் சித்ரா என்பவரைத் திருமணம் செய்தார். ஆய்க்குடியில் வசிக்கிறார்.[4]

மேற்கோள்கள்