ராஜா வீட்டுப் பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராஜா வீட்டுப் பிள்ளை
இயக்கம்தாதா மிராசி
தயாரிப்புபி. எல். மோகன்ராம்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஜெய்சங்கர்
எம். என். நம்பியார்
வி. எஸ். ராகவன்
ஸ்ரீகாந்த்
தேங்காய் சீனிவாசன்
ஜெயலலிதா
புஷ்பலதா
ஜெயபாரதி
ஒளிப்பதிவுடபிள்யூ. ஆர். சுப்பாராவ்
படத்தொகுப்புஎஸ். ஏ . முருகேசன் 
வெளியீடு1967
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜா வீட்டுப் பிள்ளை (Raja Veetu Pillai) இயக்குனர் தாதா மிராசி இயக்கி எம்.கே சாந்தாராம் எழுதி 1967 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இதில் ஜெய்சங்கர்,[2] ஜெயலலிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு.

வகை

குடும்பத் திரைப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சந்தர்ப்பவசத்தால் தான் பெற்ற மகனைப் பிரிகிறார் ஒரு பணக்காரர். அவர் தொலைத்த பிள்ளை ஏழைத் தாயின் அரவணைப்பில் வளர்கிறான். அந்தப் பணக்காரரின் தங்கை மகள் தனது முறை மாமன் என்று தெரியாமல் அந்த ஏழைத் தாயின் மகனைக் காதலிக்கிறாள். உண்மையை வெளியிட முடியாமலும் சரியான சாட்சிகள் இல்லாமலும் போவதால் பணக்காரரின் மகன் என்று நிரூபிக்க முடியவில்லை. இறுதியில் உண்மை வெளிப்பட்டதா தந்தையும் தனயனும் சேர்ந்தார்களா என்று சொல்லும் கதை.

படத்தில் புதுமையாக ஏதும் இல்லை என்று கல்கி பத்திரிகை விமர்சனம் செய்திருந்தது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.inbaminge.com/t/r/Raja%20Veetu%20Pillai/
"https://tamilar.wiki/index.php?title=ராஜா_வீட்டுப்_பிள்ளை&oldid=37139" இருந்து மீள்விக்கப்பட்டது