ராஜமார்த்தாண்டன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ராஜமார்த்தாண்டன் |
---|---|
பிறந்ததிகதி | 1948 |
இறப்பு | - சூன் 6, 2009 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
ராஜமார்த்தாண்டன் (Rajamarthandan, 1948[1] - சூன் 6, 2009) தமிழகத்தைச் சேர்ந்த விமர்சகர், இதழாளர், கவிஞர். அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி.[2] அவரது கொங்குதேர் வாழ்க்கை என்னும் பெயரிலான தொகுப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ராஜமார்த்தாண்டன் தினமணி உதவியாசிரியராக பணியாற்றியவர்; கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். தனது இறுதிக் காலத்தில் காலச்சுவட்டில் பணியாற்றினார். நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவும் முன்வைக்கப்படுகிறார். இவர் எழுதிய "ராஜமார்த்தாண்டன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இவரது நூல்கள்
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்)
- என் கவிதை (கவிதைகள்)
- ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு)
- கொங்குதேர் வாழ்க்கை
- கொங்குதேர் வாழ்க்கை தொகுதி இரண்டு
- கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி)
- புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி)
- புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி)
மறைவு
61 ஆவது வயதில் சாலை விபத்தில் காலமானார்.[3] இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ மாற்றுவெளி - ஆகஸ்ட் 2009. கீற்று. 13 செப்டம்பர் 2009. https://www.keetru.com/index.php/2009-10-07-12-27-44/09/464-2009-09-13-16-16-56.
- ↑ இலக்கியத்தின் இழப்பு!. விகடன் இதழ். 17 சூன் 2009. https://www.vikatan.com/news/miscellaneous/40576--2.
- ↑ ராஜமார்த்தாண்டன். TamilAuthors.com. https://www.tamilauthors.com/writers/india/Rajamarthandan.html.