ரம்யா சுப்பிரமணியன்
ரம்யா சுப்பிரமணியன் | |
---|---|
ஆடை திரைப்பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ரம்யா | |
பிறப்பு | இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, தஞ்சாவூர் |
பணி | நடிகை, தொகைக்காட்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | Aparajith Jayaraman (தி. 2014; ம.மு. 2015) |
வி. ஜே. ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன் (Ramya Subramanian) என்பவர் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.
தொழில்
2004 இல் மிஸ் சென்னை போட்டியில் ரம்யா பங்கேற்றார் [1] விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு?, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேல்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார்.[2] திருமணத்திற்குப் பிறகு, இவர் தொலைக்காட்சி பணிகளைக் குறைத்துக் பிற வேலையில் கவனம் செலுத்த அதிக விருப்பத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.[3]
2007 ஆம் ஆண்டில், ரம்யா மொழி படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார்.[4] 2015 இல் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக தோன்றினார்.[5][6] அதே ஆண்டில், இவர் 92.7 பிக் வானொலியில் தொகுப்பாளர் ஆனார்.[7] இவர் 2019 ஆகத்து மாதத்திற்கான வி இதழின் உடற்பயிற்சி சிறப்பு இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார்.[8]
தனிப்பட்ட வாழ்க்கை
ரம்யா சென்னையில் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பால பவனில் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஆதர்ஷ் வித்யாலயாவில் தனது 11 வது மற்றும் 12 வது படிப்பை தொடர்ந்தார்.[சான்று தேவை] பின்னர் இவர் சென்னை எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரியில் காட்சித் தொடர்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.[9]
இவர் 2014 இல் அபர்ஜித் ஜெயராமனை மணந்தார், இந்த இணையர் 2015 இல் பிரிந்தனர்.[10]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | மொழி | பண்ணையாரின் மகள் | |
2011 | மங்காத்தா | செய்தியாளர் | |
2015 | ஓ காதல் கண்மணி | அனன்யா | |
மாசு என்கிற மாசிலாமணி | செய்தியாளர் | ||
2017 | வனமகன் | ரம்யா | |
2019 | கேம் ஓவர் | வர்ஷா | இருமொழி திரைப்படம் (தமிழ் மற்றும் தெலுங்கு) |
ஆடை | ஜெனிபர் | ||
2021 | மாஸ்டர் | ரம்யா | |
சங்கத்தலைவன் | லட்சுமி |
குறிப்புகள்
- ↑ "VJ Ramya Subramanian is a fitness pro; her workout videos will inspire you". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 May 2019. Archived from the original on 23 October 2020. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
- ↑ Raghavan, Nikhil (3 March 2014). "ShotCuts: What a brainwave!". தி இந்து. Archived from the original on 16 June 2021. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
- ↑ CR, Sharanya (22 March 2014). "I am choosy about my work now: Ramya". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 6 October 2015. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
- ↑ "VJ Ramya takes a 'kutty break' from social media to 'unplug'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 May 2020. Archived from the original on 28 May 2020. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
- ↑ "Ramya Subramanian moves to big screen". Sify. 30 November 2014. Archived from the original on 13 October 2015. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
- ↑ "VJ Ramya reveals she accepted OK Kanmani because of Mani Ratnam". IndiaGlitz. 20 April 2015. Archived from the original on 20 July 2019. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
- ↑ "Ramya is an RJ now". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 September 2015. Archived from the original on 5 September 2015. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
- ↑ "Ramya Subramanian Exclusive Photoshoot". WE Magazine. 7 August 2019. Archived from the original on 8 August 2019. பார்க்கப்பட்ட நாள் 8 August 2019.
- ↑ Das, Papri (5 December 2013). "VJ Ramya is anchoring for the fun of it". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 29 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
- ↑ "VJ Ramya confirms ending marriage". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 September 2015. Archived from the original on 11 August 2020. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.