ம. தியாகராசா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ம. தியாகராஜா
வவுனியா மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 அக்டோபர் 2013
தனிநபர் தகவல்
பிறப்பு வயிரவப்புளியங்குளம், வவுனியா, இலங்கை
அரசியல் கட்சி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இனம் இலங்கைத் தமிழர்

மயில்வாகனம் தியாகராசா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

தியாகராசா வவுனியா மாவட்டம் வைரவப்புளியங்குளத்தைச் சேர்ந்தவர். வவுனியா கனகராயன்குளம் கமநலசேவை நிலையத்தில் களஞ்சியப் பொறுப்பாளராக அரச சேவையில் இணைந்த இவர் பயிர்ச்செய்கை அலுவலராகவும் பின்னர் கிராமசேவை அலுவலராக வவுனியா மாவட்டத்தில் பல இடங்களிலும் பணியாற்றினார். இவர் ஒரு சமாதான நீதவானும் ஆவார்.[1]

அரசியலில்

தியாகராஜா 2013 வட மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 11,681 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[2][3] இவர் 2013 அக்டோபர் 16 ஆம் நாள் வவுனியாவில் சட்டத்தரணி ஒருவரின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.[4][5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ம._தியாகராசா&oldid=24307" இருந்து மீள்விக்கப்பட்டது