மேப்பிள்
| மேப்பிள் | |
|---|---|
| படிமம்:Acer pseudoplatanus 002.jpg | |
| சிக்கமோர் மேப்பிள் (Acer pseudoplatanus இலை | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | சப்பின்டேலசு
(Sapindales) |
| குடும்பம்: | சப்பின்டேசியே
(Sapindaceae) |
| பேரினம்: | ஏசர் |
| இனங்கள் | |
| படிமம்:Map genus Acer.png | |
| மேப்ப | |
ஏசர் அல்லது மேப்பிள் (தமிழ்: மேப்பிள்ளை, மேப்பம், மேம்பு) மர அல்லது புதர் வகையான ஒரு பேரினமாகும்.128 வகை இனங்கள் இப்பேரினத்தில் உள்ளன. இவ்வினங்களுக்குப் பிறப்பிடமாக ஆசியாவைக் கருதுகின்றனர். மேப்பிள் மரங்கள் ஆசியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. புவியின் தென்பாதி கோளத்தில் 40 மீ உயரம் வளரும் ஏசர் இலாரினம் (Acer laurinum) என்னும் ஒரேயொரு இனம் மட்டும் காணப்படுகின்றது. பொதுவாக மேப்பிள் மரங்கள் 10-40 மீ உயரம் வளரக்கூடியவை மேப்பிள் மரத்தில் ஒருவகையான இனிப்புநீர் சுரக்கின்றது. இது பெரும்பாலும் பிப்பிரவரி, மார்ச்சு மாதங்களில் நிகழும். இதனை அடிமரத்தில் துளையிட்டு வடியச்செய்து காய்ச்சி ஓர் இனிப்பு குடிநீர்மமாகப் பயன்படுத்துகின்றனர். மேபிள் மரம் பல வகை தளபாடங்கள் செய்ய பயன்படுகிறது. மேபிள் இலை கனடா நாட்டின் கொடிச் சின்னமாகும்.