மேன் ஓ'வார்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Manowar1920.jpg
1920 இல் மேன் ஓ'வார்

மேன் ஓ' வார் (Man o' War, 29 மார்ச், 1917 - 1 நவம்பர், 1947) என்பது அமெரிக்க பந்தயக் குதிரை ஆகும். இது எல்லா காலத்திலும் சிறந்த பந்தயக் குதிரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தி பிளட்-ஹார்ஸ், ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட், அசோசியேட்டட் பிரெசு உள்ளிட்ட பல விளையாட்டு வெளியீடுகள் மேன் ஓ' வார் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க பந்தயக் குதிரையாக கருதுகின்றன. முதலாம் உலகப் போருக்குப் பிறகு இது கலந்து கொண்ட 21 பந்தயங்களில் 20 பந்தயங்களையும் $249,465 (2024 இல் $3,916,000 க்கு சமம்) பணப் பரிசுகளையும் வென்றது. இது அதிகாரப்பூர்வமற்ற 1920 அமெரிக்க குதிரை மற்றும் த நியூயார்க் டைம்ஸ் ஆல் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக பேப் ரூத்துடன் கௌரவிக்கப்பட்டது. இது 1957 இல் தேசிய பந்தய அருங்காட்சியகம் மற்றும் புகழ் மண்டபத்தில் சேர்க்கப்பட்டது. 2017 மார்ச் 29 அன்று, அருங்காட்சியகம் இதன் நினைவாக "நூற்றாண்டில் மேன் ஓ' வார்" என்ற சிறப்பு கண்காட்சியைத் திறந்தது.

1919 ஆம் ஆண்டில், மேன் ஓ' வார் கலந்துகொண்ட 10 போட்டிகளில் 9 இல் வென்றது, அவற்றில் அமெரிக்காவில் இரண்டு வயது குதிரைகளுக்கான மிக முக்கியமான பந்தயங்களான ஹோப்ஃபுல் ஸ்டேக்ஸ், பெல்மாண்ட் ஃபியூச்சரிட்டி ஆகியவை அடங்கும். இதன் ஒரே தோல்வி என்பது சரடோகா பந்தைய மைதானத்தில் ஏற்பட்டது. பின்னர் இது கிரேவ்யார்ட் ஆஃப் சாம்பியன்ஸ் என்று செல்லப்பெயரைப் பெற்றது. சரடோகா மைதானத்தில் நடந்த அப்போட்டியில் அப்செட் என்ற குதிரையிடம் தோற்றது.

1920 கென்டக்கி டெர்பி போட்டியில் மேன் ஓ' வார் இடம்பெறவில்லை, ஏனெனில் அதன் உரிமையாளர் சாமுவேல் ரிடில் ஒரு இளம் குதிரை பத்து பர்லாங்குகள் (2,000 m) (ஒன்றே கால் மைல்) தொலைவு உள்ள பந்தயத்தில் அவ்வளவு சீக்கிரம் ஈடுபடும் என்பதை நம்பவில்லை. அதற்கு பதிலாக, மேன் ஓ' வாரை அதன் மூன்று வயதில் பிரீக்னஸ் ஸ்டேக்ஸ் பந்தையத்தில் அறிமுகப்படுத்தினார், அங்கு இது அப்செட்டை 1+1⁄2 குதிரை நீளத்தில் தோற்கடித்தது. மேன் ஓ' வார் பின்னர் பெல்மாண்ட் ஸ்டேக்சில் 20 குதிரை நீள வித்தியாசத்தில் வென்று உலக சாதனைப் படைத்தது. கோடை மற்றும் இலையுதிர் காலம் முழுவதும், இது தனது சக மூன்று வயது குதிரைகளிடம் நடந்த போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி, பல சாதனைகளை படைத்து. 1919 ஆம் ஆண்டில் அமெரிக்க டிரிபிள் கிரீடம் என்று பின்னர் அறியப்பட்ட பட்டத்தை வென்ற சர் பார்டன் குதிரைக்கு எதிரான போட்டிப் பந்தயத்தில் மட்டுமே இது தன்னைவிட வயதில் மூத்த குதிரையை தன் இறுதிப் போடியில் எதிர்கொண்டது. மேன் ஓ' வார் முழுமையாக படமாக்கப்பட்ட முதல் குதிரைப் பந்தயத்தில் ஏழு குதிரை நீள வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இதன் பிறகு மேன் ஓ'வார் பந்தையங்களில் கலந்து கொள்ளாது, அது ஓய்வு பெற்றுவிட்டது என்று ரிடில் அறிவித்தார். அது இவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறுவதை பலர் விரும்பவில்லை. அதனால் வெற்றுக் காசோலையை நீட்டி அமெரிக்க பணக்காரரான வேகனர் மேன் ஓ'வாரை விலைக்குக் கேட்டார். ஆனால் ரிடீல் இக்குதிரையை யாருக்கும் விற்பதாக இல்லை என்று மறுத்துவிட்டார். பந்தையங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும் மேன் ஓ'வாரை பார்க்க பல சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலை இருந்தது. இதைய நோயால் பாதிக்கபட்டிருந்த மேன் ஓ'வார் 1947 ஆம் ஆண்டில் தன் 30 வயதில் இறந்தது. அதன் இறுதிச் சடங்கை என்.பி.சி வானொலி சேரடி வருணனை செய்தது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மேன்_ஓ%27வார்&oldid=475734" இலிருந்து மீள்விக்கப்பட்டது