மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், ஊட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், ஊட்டி, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள ஊட்டி எனப்படும் உதகமண்டலத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள கூனூர் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் இந்திய வரலாறு, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை விளக்கும் முழு அளவு மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை பொறியியலாளரும், மெழுகுக் கைப்பணியாளருமான சிறீஜி பாஸ்கரன் என்பவரால் உருவாக்கப்பட்டவை.

130 ஆண்டுகள் பழமையான ஒரு கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, ஏ. பி. ஜே அப்துல்கலாம், டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரின் உருவச் சிலைகள் உட்படச் சுமார் 20 உருவச்சிலைகள் உள்ளன.


இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்