மெகருன்னிசா பர்வேசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மெகருன்னிசா பர்வேசு
இயற்பெயர்/
அறியும் பெயர்
மெகருன்னிசா பர்வேசு
பிறந்ததிகதி 1944
பிறந்தஇடம் இந்தியா
பணி எழுத்தாளர்
தேசியம் இந்தியர்
இணையதளம் தனிப்பட்ட வலைத்தளம்

மெகருன்னிசா பர்வேசு என்பவர் இந்தி இலக்கியத்தில் கதை, புதினத்தின் வழி இலக்கியப் பங்களித்துள்ள ஓர் இந்தியப் பெண் எழுத்தாளராவார்.[1]

சுயசரிதை

1944 ஆம் ஆண்டில் பிறந்துள்ள இவரது முதல் கதை 1963 ஆம் ஆண்டில் தர்மயுக் எனற இதழில் வெளியிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து இந்தியில் பல்வேறு சிறுகதைகள் மற்றும் நாவல்களையும் எழுதியுள்ளார்.[2]

1967 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அம்மா[3], மற்றும் 1969 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமாரா[4] ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க இரண்டு இலக்கியப் படைப்புகளாகும். இதைத்தவிர, மேலும் பல சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.[5]

இவரது படைப்புகள் இந்தியாவின் பல்வேறு கல்லூரிகளில் இந்தி இலக்கியத்தைப் பற்றிய கல்வியியல் ஆய்வுகளுக்கு பயன்படுகிறது[6].[7] இந்தி இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, இந்திய அரசு, 2005 ஆம் ஆண்டில், பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமக்கள் விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.[8]

ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான திரு பகீரத் பிரசாத்தை மணந்துள்ளார். இவரது கணவர், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ஆட்சிப்பணியில் நுழைந்த முதல் நபர் என்ற பெருமையைக் கொண்டவர். மேலும் மத்திய பிரதேசத்தின் பிந்த் மக்களவைத் தொகுதியிலிருந்து 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இத்தம்பதியினர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தற்போது வசித்து வருகின்றனர் .[9]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "India: Door-to-door nikaahnama drive". Women Living Under Muslim Laws. 2015. http://www.wluml.org/node/2131. 
  2. "Mehrunnisa Parvez (1944-)". Katha. 2015. http://www.katha.org/site/list-of-authors-translators-and-illustrators#adult-book-writers-M. 
  3. Mehrunnisa Parvez (1997). Amma. Jnana Ganga; Samskarana. பக். 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8185829609. 
  4. Mehrunnisa Parvez (1999). Samara. Grantha Akadami. பக். 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8185826721. 
  5. "Mehrunissa Pervez Books". Pustak. 2015. http://pustak.org/bs/home.php?author_name=Mehrunnisa%20Parvez. 
  6. "மெஹருன்னிசா பர்வேஜ் கதை சாஹித்யத்தில் படலதே ஜீவன் மூல்ய". https://mgutheses.in/page/about_book.php?q=T%202400&search=&page=1&rad=. 
  7. Mini, P. (2015). "Mehrunnisa Parvez ke katha sahitya mein badalte jivan mulya". University (Shodh Ganga). http://shodhganga.inflibnet.ac.in/handle/10603/19585. பார்த்த நாள்: November 30, 2015. 
  8. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து October 15, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151015193758/http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 
  9. "Congress candidate joins BJP". Telegraph India. 10 March 2014 இம் மூலத்தில் இருந்து 15 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140315035247/http://www.telegraphindia.com/1140310/jsp/nation/story_18064329.jsp#.Vlv0ePkrLIU. 
"https://tamilar.wiki/index.php?title=மெகருன்னிசா_பர்வேசு&oldid=18903" இருந்து மீள்விக்கப்பட்டது