மு. ரா. அருணாசலக் கவிராயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முகவூர் இராமசாமி அருணாசலக் கவிராயர் என்பவர் தமிழகப் புலவரும், பதிப்பாளரும் உரையாசிரியரும் ஆவார். இவர் சேற்றூர் அருகில் உள்ள முகவூரில் பிறந்தவர்.[1] 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியிலும் வாழ்ந்தவர். இவர் மு. இராமசாமிக் கவிராயரின் மகன்களில் ஒருவர். மு. ரா. சுப்பிரமணியக் கவிராயரும், மு. ரா. கந்தசாமிக் கவிராயரும் இவர்க்கு உடன் பிறந்தவர்கள். இவர் சிவகாசித் திருப்பதிப் பெருமான் மீது பல சிறு காப்பியங்கள் இயற்றியுள்ளார். பல அந்தாதிகளும், பிள்ளைத் தமிழ்களும், பதிகங்களும் இயற்றியிருக்கிறார். ஆறுமுக நாவலர் வரலாற்றையும் செய்யுளில் எழுதியுள்ளார். திருக்குறளைத் தெளிவான உரைநடையில் எழுதியிருக்கிறார். அதற்கு ஓர் உரையும் இயற்றியிருக்கிறார். பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.[2]

இயற்றிய நூல்கள்

  • சிவகாசிப் புராணம்
  • குறுக்குத்துறைச் சிலேடைவெண்பா
  • சேற்றைத் தவம்பெற்ற நாயகி பிள்ளைத் தமிழ்
  • பர்வதவர்தினியம்மை பிள்ளைத்தமிழ்
  • ஒற்றைக்கடை விநாயகர் அந்தாதி
  • இரட்டை மணிமாலை
  • மும்மணிக்கோவை
  • குற்றாலப்புராணம்
  • வேணுவன புராணம்
  • காந்தியம்மை பிள்ளைத்தமிழ்

மேற்கோள்கள்