மு. அப்துல் சமது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மு. அப்துல் சமது
மு. அப்துல் சமது
இயற்பெயர்/
அறியும் பெயர்
மு. அப்துல் சமது
பிறந்ததிகதி சனவரி 15 1962
அறியப்படுவது எழுத்தாளர்

மு. அப்துல் சமது (பிறப்பு: சனவரி 15 1962, இந்திய முஸ்லிம் எழுத்தாளர். தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உத்தமபாளையம் எனுமிடத்தில் பிறந்த இவர் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரொரு எழுத்தாளரும், பேச்சாளரும், நாட்டுப்புறவியல், இதழியல், நிஜநாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டி வருபவருமாவார். தமிழகத்தின் முன்னணி இஸ்லாமிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

இவர் விண் தொலைக்காட்சியில் "அலசல் அரங்கம்" நிகழ்ச்சியின் நெறியாளராவார். மேலும் தமிழன் தொலைக்காட்சியில் "மானுட வசந்தம்" நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

எழுதிய நூல்கள்

  • "தியாகத்தின் நிறம் பச்சை"
  • "சீக்கராப்பள்ளி தந்த செம்மல்"
  • "இஸ்லாத்தின் மனித மதிப்பு"

பெற்ற விருதுகள்

  • சீதக்காதி அறக்கட்டளையின் 'சதக்கதுல்லா அப்பா இலக்கிய விருது' பெற்றுள்ளார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=மு._அப்துல்_சமது&oldid=5529" இருந்து மீள்விக்கப்பட்டது