முஸ்தபா (திரைப்படம்)
முஸ்தபா (Musthaffaa) ஆர். அரவிந்த்ராஜ் இயக்கத்தில், 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. ஜி. ஸ்ரீகாந்த் தயாரிப்பில், வித்தியாசாகர் இசையில், 16 பிப்ரவரி 1996 ஆம் தேதி வெளியானது. துரைசாமி நெப்போலியன், ரஞ்சிதா, கவுண்டமணி, கே. பிரசன்னா, லட்சுமி, காஸான் கான், அலெக்ஸ், சூர்யா, ராஜேஷ்குமார் மற்றும் பலர் நடுத்துள்ளனர். பின்னர், 1997 ஆம் ஆண்டு இந்தி மொழியில் குலாம்-ஈ-முஸ்தபா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் ரெஹ்மத் அலி என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[1][2][3][4]
நடிகர்கள்
நெப்போலியன், ரஞ்சிதா, கவுண்டமணி, கே. பிரசன்னா, லட்சுமி, கசான் கான், அலெக்ஸ், சூர்யா, ராஜேஷ்குமார், பப்லூ ப்ரித்விராஜ், கணேஷ்கர், சர்மிளா, சூரியகாந்த், பிரதாப் சந்திரன், குமரிமுத்து, டி. எஸ். ராகவேந்திரா, வைத்தி, சாமிநாதன், முரளி குமார், ஜானகி, பி. ஆர். வரலக்ஷ்மி, மைதிலி, ஜெயமணி.
கதைச்சுருக்கம்
முஸ்தபா (துரைசாமி நெப்போலியன்), பெரியவரின் (சூர்யா) நம்பிக்கைக்கு பாத்திரமான கையாள் ஆவான். பெரியவருக்கு வரும் பிரச்சனைகளை அனைத்தையும், செல்லப்பாவின் (கவுண்டமணி) உதவியுடன் தீர்த்து வைப்பான் முஸ்தபா.
அந்நிலையில், சுதர்சனம் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, நேர்மை தவறாத, லஞ்சம் வாங்காத பிராமண வகுப்பை சேர்ந்தவர். தனது நேர்மையான வாழ்க்கை முறையால், பணத்தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதை கருத்தில் கொண்டு, ஆய்வுகள் செய்யாமல் சில ஒப்பந்தங்களில் சுதர்சனை கையொப்பம் போட வற்புறுத்துகிறான் முஸ்தபா.
நாட்டிய மங்கை கவிதாவுடன் (ரஞ்சிதா) பழக்கம் ஏற்பட்டு, முஸ்தபாவும் கவிதாவும் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். சுதர்சனனுக்கு பணத்தேவை அதிகமானால், லஞ்சம் வாங்கும் பொழுது லஞ்சஒழிப்பு அதிகாரியிடம் அகப்படுகிறார்.
அரசியல் சார்ந்த பிரச்சனைகளால் பெரியவரை கொல்ல வகுக்கப்படும் திட்டத்தில், பரிதாபமாக கவிதா உயிரிழக்க நேரிடுகிறது. பின்னர், பெரியவருக்கும் முஸ்தபாவிற்கும் மோதல் ஏற்பட்டு, முஸ்தபாவை கொல்ல முடிவு செய்கிறார் பெரியவர். இறுதியில், முஸ்தபாவிற்கு என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
இந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் வித்தியாசாகர் ஆவார். வைரமுத்து எழுதிய 5 பாடல்களும் 1996 ஆம் ஆண்டு வெளியானது.
தயாரிப்பு
வார இதழான ஆனந்த விகடனில் கே. பிரசன்னா எழுதிய நாடகம் மிகவும் பிடித்தால் பி. ஜி. ஸ்ரீகாந்த் இந்தப்படத்தை தயாரிக்க முடிவுசெய்தார். ஊமை விழிகள் (1986 திரைப்படம்), உழவன் மகன் (திரைப்படம்) போன்ற படங்களை இயக்கிய அனுபவமுள்ள ஆர். அரவிந்தராஜ், நெப்போலியனை வைத்து இப்படத்தை இயக்கினார்.[5][6]
வரவேற்பு
நெப்போலியனின் நடிப்பு நன்றாக இருந்ததாவும், படத்தின் முதற்பாதியின் குறைகளை இரண்டாம் பாதி சரிசெய்யும் வகையில் அமைந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.[6]
மேற்கோள்கள்
- ↑ "http://spicyonion.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "www.cinesouth.com". Archived from the original on 2005-02-10. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "www.jointscene.com". Archived from the original on 2012-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "www.actornapoleon.com". Archived from the original on 2017-11-19. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.
- ↑ "www.indiaglitz.com".
- ↑ 6.0 6.1 "தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (1996-03-09)".